உள்ளடக்கத்திற்கு செல்ல
ADDED : செப் 03, 2026 01:01 AM
அ நிறம் | அளவு
சென்னை: ஹிந்து சமய அறநிலையத் துறை அதிகாரிகள் சிலர் கூறியதாவது:
கோவில் கிணறுகளில் உள்ள நீரின் தரத்தை, உடனடியாக ஆய்வு செய்ய வேண்டும் என, சமீபத்தில் நடந்த கூட்டத்தில், கமிஷனர் வினய் உத்தரவிட்டுள்ளார்.
மேலும், கிணற்று நீரின் கார, அமிலத் தன்மை மற்றும் துாய்மையை பரிசோதனை செய்து, குடிப்பதற்கு உகந்ததா அல்லது நந்தவனங்கள் பராமரிப்பு மற்றும் துாய்மை பணிகளுக்கு பயன்படுத்தலாமா என, வகைப்படுத்த வேண்டும் என, வாய்மொழியாக அவர் அறிவுறுத்தினார்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.
