sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

தமிழகம்

/

கும்பமேளாவில் பங்கேற்கும் தமிழக பக்தர்களுக்கு தற்காலிக சொகுசு குடியிருப்புகள்!

/

கும்பமேளாவில் பங்கேற்கும் தமிழக பக்தர்களுக்கு தற்காலிக சொகுசு குடியிருப்புகள்!

கும்பமேளாவில் பங்கேற்கும் தமிழக பக்தர்களுக்கு தற்காலிக சொகுசு குடியிருப்புகள்!

கும்பமேளாவில் பங்கேற்கும் தமிழக பக்தர்களுக்கு தற்காலிக சொகுசு குடியிருப்புகள்!

2


UPDATED : டிச 26, 2024 06:47 AM

ADDED : டிச 26, 2024 06:45 AM

Google News

UPDATED : டிச 26, 2024 06:47 AM ADDED : டிச 26, 2024 06:45 AM

2


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சென்னை: மகா கும்பமேளாவில், பங்கேற்க செல்லும் தமிழக பக்தர்களுக்காக, 400 தற்காலிக சொகுசு குடியிருப்புகளை ஐ.ஆர்.சி.டி.சி., அமைத்துள்ளது.

உத்தரபிரதேச மாநிலம் பிரயாக்ராஜில், 12 ஆண்டுகளுக்கு ஒரு முறை மகா கும்பமேளா நடக்கிறது. இது உலகின் மிகப்பெரிய ஆன்மிக, கலாச்சார மற்றும் மத நிகழ்வுகளில் ஒன்றாக விளங்குகிறது.Image 1361388

இந்நிலையில், பிரயாக்ராஜில் வரும் 2025 ஜன., 13ம் தேதி முதல் பிப்., 26 வரை மகா கும்பமேளா, 45 நாட்கள் நடக்க உள்ளது. இதில், 43 கோடி பக்தர்கள் பிரயாக்ராஜ் வருவர் என எதிர்பார்க்கப்படுகிறது. இதற்கான ஏற்பாடுகளை அந்த மாநில அரசு, மத்திய அரசின் துறைகளோடு இணைந்து மேற்கொண்டு வருகிறது.

இந்திய ரயில்வே உணவு மற்றும் சுற்றுலா கழகம் எனப்படும் ஐ.ஆர்.சி.டி.சி.யின் தென்மண்டலம் சார்பில், தமிழக பக்தர்களுக்காக தற்காலிக குடியிருப்புகள் உள்ளிட்ட வசதிகளை மேற்கொண்டு வருகிறது. இது குறித்து, ஐ.ஆர்.சி.டி.சி., அதிகாரிகள் கூறியதாவது:

Image 1361389மகா கும்பமேளாவில் செல்லும் பக்தர்களுக்காக, தனியாக சுற்றுலா சிறப்பு ரயில்கள் இயக்கம், தற்காலிக, சொகுசு குடியிருப்புகள் அமைத்து வருகிறோம். மகா கும்பமேளா நடக்கும் திரிவேணி சங்கமத்தில், இருந்து 3.5 கி.மீ., துாரத்தில் பிரயாக்ராஜில் 400 சொகுசு குடியிருப்புகளை அமைத்துள்ளோம். 300 டீலக்ஸ் குடியிருப்புகளும், 100 பிரிமீயம் பிரிவில் குடியிருப்புகளும் அமைக்கப்பட்டுஉள்ளன.

ஆரம்ப கட்டணம் 16,200 ரூபாய். உணவுகள், பெட் வசதி, , கழிப்பிட வசதி, சி.சி.டி.வி., கேமரா பாதுகாப்பு உள்ளிட்ட இருக்கும். இது குறித்து மேலும் தகவல் பெற, 8076025236 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம். அல்லது https://www.irctctourism.com/mahakumbhgram என்ற இணையதளத்தில் பார்வையிடலாம். இவ்வாறு அவர்கள் கூறினர்.






      Dinamalar
      Follow us