ADDED : அக் 04, 2024 11:18 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சென்னை:திருச்சி மாவட்டத்தில், திருச்சி - மதுரை நெடுஞ்சாலையில், பஞ்சப்பூரில் அமைந்துவரும் ஒருங்கிணைந்த பஸ் நிலையம் அருகே, டைடல் பார்க் கட்டடம் அமைக்கப்பட உள்ளது.
இது, 6 லட்சம் சதுர அடியில், 400 கோடி ரூபாய் செலவில் அமைக்கப்பட உள்ளது.
தரைதளம் மற்றும் ஆறு தளங்களுடன் டைடல் பார்க் கட்டடம் கட்ட ஒப்பந்த நிறுவனத்தை தேர்வு செய்ய, டெண்டர் கோரப்பட்டுள்ளது.