ஊரக வளர்ச்சி துறையில் மீண்டும் 'டெண்டர்' குளறுபடி
ஊரக வளர்ச்சி துறையில் மீண்டும் 'டெண்டர்' குளறுபடி
ADDED : ஜூலை 22, 2026 11:00 PM
சென்னை: ஊரக வளர்ச்சித் துறை சார்பாக, தென்காசி மாவட்டத்தில் உள்ள மூன்று ஊராட்சி ஒன்றியங்களில் வெளியிடப்பட்ட, 'டெண்டர்'களில் விதிமீறல் நடந்துள்ளதாக புகார் எழுந்துள்ளது.
தமிழக ஊரக வளர்ச்சி துறை சார்பாக, காஞ்சிபுரம், திருநெல்வேலி, கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களில் வெளியிடப்பட்ட டெண்டர்களில், விதிமுறைகளை மாற்றியதாக புகார் எழுந்தது.
இதனால், சில டெண்டர்கள் ரத்து செய்யப்பட்டன.
இந்நிலையில், தென்காசி மாவட்டத்தில் குருவிகுளம், ஆலங்குளம், கடையநல்லுார் ஆகிய ஊராட்சி ஒன்றியங்களில், சமுதாயக் கூடம், சுகாதார வளாகம் கட்டுதல், சிமென்ட் சாலைகள் அமைத்தல், சுற்றுச்சுவர் மேம்படுத்துதல் தொடர்பாக, சமீபத் தில் டெண்டர்கள் வெளியிடப்பட்டன.
ஆனால், இந்த டெண்டர்களில், அந்தந்த ஒன்றியத்தில் பதிவு செய்தவர்கள் மட்டுமே பங்கேற்கும் வகையில் விதிகள் மாற்றப்பட்டுள்ளன.
இதனால், 52 டெண்டர்களிலும் முறைகேடு நடக்க வாய்ப்பு உள்ளதாக, அறப்போர் இயக்கம் குற்றச்சாட்டு கூறியுள்ளது.
எனவே, ஊரக வளர்ச்சித் துறை சார்பாக வெளியிடப்பட்ட, 52 டெண்டர்களையும் ரத்து செய்து, விதிமுறை களுக்கு உட்பட்டு, புதிய டெண்டர்களை வெளியிடவேண்டும் என, முதல்வர் விஜய், துறை அமைச்சர் ஆனந்த் மற்றும் உயர் அதிகாரிகளுக்கு, அந்த அமைப்பு கடிதம் அனுப்பியுள்ளது.
