ஆவினில் கொள்முதல் தொகையை மறைத்து 'டெண்டர்' வெளியீடு
ஆவினில் கொள்முதல் தொகையை மறைத்து 'டெண்டர்' வெளியீடு
ADDED : ஜூலை 07, 2026 04:10 AM

சென்னை: ஆவினில், பால் மட்டுமின்றி தயிர், லஸ்ஸி, மோர் உள்ளிட்டவைகளை அடைத்து விற்க, 'பாலி பிலிம் கவர்' பயன்படுத்தப் படுகிறது.
தனியாரிடம் இருந்து பாலி பிலிம் கவரை, ஆவின் நிறுவனம் மொத்தமாக கொள்முதல் செய்கிறது. அதன்படி, வரும் 2029ம் ஆண்டு வரையிலான தேவைக்காக, 20,402 டன் பாலி பிலிம் கவர்களை கொள்முதல் செய்வதற்கான பணிகளை, ஆவின் நிறுவனம் தொடங்கியுள்ளது.
இதற்காக, அரசின் இணையதளத்தில் அறிவிப்பு வெளியிடப்பட்டு உள்ளது. இதற்கு, 400 கோடி ரூபாய் வரை ஆவின் நிறுவனம் செலவிட உள்ளது.
இதற்கான ஒப்பந்ததார ர் தேர்வு, இன்று ஆவின் தலைமை அலுவலகத்தில் நடக்கவுள்ளது. ஆனால், டெண்டரில், மதிப்பீட்டு தொ கையை குறிப்பிடாமல் விட்டுள்ளனர்.
இதுகுறித்து, ஆவின் வட்டாரத்தில் சிலர் கூறியதாவது: முந்தைய அ.தி.மு.க., - தி.மு.க., ஆட்சிகளில், சிலருக்கு ஒப்பந்தம் வழங்கும் வகையில், டெண்டர் தொகை மறைக்கப்பட்டது. இதன் வாயிலாக, 20 முதல் 35 சதவீதம் வரை கமிஷன் கைமாறியது.
அதேபோன்ற நடைமுறையில், பாலி பிலிம் கவர்கள் கொள்முதலுக்கு டெண்டர் அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இவ்வாறு அவர்கள் கூறினர்.
