ஜவுளி தொழில்நுட்ப மையம் தொழில்துறையினர் வரவேற்பு
ஜவுளி தொழில்நுட்ப மையம் தொழில்துறையினர் வரவேற்பு
ADDED : ஆக 08, 2026 06:37 AM

திருப்பூர்: இந்தியாவின் மொத்த பின்னலாடை உற்பத்தியில் 68 சதவீத பங்களிப்பை கொண்டுள்ள திருப்பூர், பருத்தி ஆடைகள் உற்பத்தியில் ஏற்கனவே தன்னிறைவு பெற்றுவிட்டது.
சர்வதேச அளவில் புதிய தடையற்ற வர்த்தக ஒப்பந்தங்கள் வாயிலாக கிடைக்கும் வர்த்தக வாய்ப்புகளை கைப்பற்றி, திருப்பூர் அடுத்தகட்ட வளர்ச்சியை எட்ட வேண்டுமெனில் செயற்கை நுாலிழை ஆடை உற்பத்தியை அதிகரிப்பது காலத்தின் கட்டாயமாக உள்ளது.
தற்போது, செயற்கை நுாலிழை ஆடை உற்பத்தியை 30 சதவீதமாக உயர்த்த திருப்பூர் ஆயத்தமாகி வருகிறது. இதற்காக புதிய தொழில்நுட்ப பகிர்வு, திறன் மேம்பாடு மற்றும் ஆராய்ச்சி மையங்களின் தேவை அவசியமாக இருந்தது.
இந்த சூழலில், தமிழக பட்ஜெட்டில் 10 கோடி ரூபாய் செலவில் 'திருப்பூர் ஜவுளி தொழில்நுட்ப மையம்' அமைக்கப்படும் என அறிவிக்கப்பட்டிருப்பது தொழில்துறையினரிடையே வரவேற்பை பெற்றுள்ளது.
தென்னிந்திய பனியன் உற்பத்தியாளர்கள் சங்க (சைமா) நிர்வாகிகள் கூறுகையில், ''உள்கட்டமைப்பு மற்றும் ஆடை தொழில்நுட்பத்தை மேம்படுத்த பிரத்யேக மையம் அமைக்கப்பட வேண்டும் என்ற எங்கள் நீண்ட நாள் கோரிக்கையை ஏற்று தமிழக அரசு 10 கோடி ரூபாய் நிதி ஒதுக்கியுள்ளது.
''இதன் மூலம் செயற்கை நுாலிழை ஆடை உற்பத்தி எதிர்பார்த்த வேகத்தில் வளர்ச்சி அடையும். என்றனர்.
