ADDED : ஜன 20, 2024 01:44 AM
* விழா அரங்கிற்குள் பள்ளி மாணவ, மாணவியர், விளையாட்டு வீரர்கள், வீராங்கனையர் மட்டும் அனுமதிக்கப்பட்டனர்
* மாலை 5:00 மணிக்கு, அரங்கில் தமிழ் மற்றும் ஹிந்தி பாடல்கள் ஒலிபரப்பப்பட்டன
* மாலை 5:20 மணிக்கு, தமிழக விளையாட்டுத்துறை சார்பில் நடத்தப்பட்ட, தேசிய மற்றும் சர்வதேச விளையாட்டுப் போட்டிகள் குறித்த குறும்படம், தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சார்பில் நடத்தப்படும், முதல்வர் விளையாட்டுப் போட்டி குறித்த குறும்படம் திரையிடப்பட்டது
* மாலை 6:03 மணிக்கு, பிரதமர் மோடி அரங்கிற்கு வந்தார்; அவரை முதல்வர் வரவேற்றார்
* பிரதமருக்கு கேலோ இந்தியா இளைஞர் விளையாட்டு போட்டி லோகோவான, 'வீரமங்கை' நினைவு சின்னத்தை, முதல்வர் வழங்கினார். மற்ற விருந்தினர்களுக்கும் வீரமங்கை சிலை வழங்கப்பட்டது
* பிரதமர் ஹிந்தியில் பேசினார். அவர் பேச்சை. 'கியூஆர் கோடு' வழியாக தமிழில் கேட்க ஏற்பாடு செய்யப்பட்டது
* விழா முடிவில், முதல்வர் ஸ்டாலினுக்கு கைகொடுத்து, பிரதமர் நன்றி தெரிவித்தார். அமைச்சர் உதயநிதி முதுகில் தட்டி கொடுத்து, அவர் குறித்து முதல்வரிடம் பாராட்டு தெரிவித்தார்
* கலை நிகழ்ச்சியில் பங்கேற்றவர்களில் பெரும்பாலானோர், கருப்பு, சிவப்பு வண்ண உடை அணிந்திருந்தனர்
* கலை நிகழ்ச்சிகள், வாண வேடிக்கை அனைவரையும் கவர்ந்தன. கேலோ இந்தியா இளைஞர் விளையாட்டு போட்டியில் இடம் பெற்றுள்ள விளையாட்டுகள், 'லேசர்' ஒளியில் காட்டப்பட்டன.