ADDED : ஏப் 01, 2025 05:29 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சென்னை : மூன்று நாட்கள் தொடர் விடுமுறைக்கு பின், சட்டசபை கூட்டம் இன்று மீண்டும் துவங்குகிறது.
சட்டசபையில் மார்ச், 14ம் தேதி பொது பட்ஜெட், 15ல் வேளாண் பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது. பட்ஜெட் மீதான விவாதம், 17 முதல், 21 வரை நடந்தது. தொடர்ந்து, 24 முதல் துறை வாரியாக மானிய கோரிக்கைகள் தாக்கல் செய்யப்பட்டு வருகின்றன.
மூன்று நாட்கள் விடுமுறைக்குப் பின், இன்றும் கூடும் சட்டசபையில், நெடுஞ்சாலைத் துறை மற்றும் பொதுப்பணிப் துறை மானிய கோரிக்கைகள் தாக்கல் செய்யப்பட உள்ளன.
அது தொடர்பான விவாதத்திற்கு பதில் அளித்து, புதிய அறிவிப்புகளை துறை அமைச்சர் வேலு வெளியிட உள்ளார்.