உள்ளடக்கத்திற்கு செல்ல

திருப்பரங்குன்றம் பிரச்னைக்கு அதிகாரிகளே காரணம்: சொல்கிறார் ஹெச்.ராஜா
திருப்பரங்குன்றம் பிரச்னைக்கு அதிகாரிகளே காரணம்: சொல்கிறார் ஹெச்.ராஜா
ADDED : நவ 28, 2026 08:33 PM

அ நிறம் | அளவு
இதுகுறித்து பாஜ மூத்த தலைவரான ஹெச். ராஜா மேலும் கூறியதாவது;
தமிழகத்தில், 1967ல் இருந்தே ஹிந்து விரோத தீய சக்தி செயல்பட்டுக் கொண்டிருக்கிறது. ஹிந்து சமய அறநிலையத்துறை ஹிந்துக்களுக்கு ஆதரவாக இல்லை.
திருப்பரங்குன்றம் தீபம் ஏற்றும் பிரச்னைக்கு அதிகாரிகளே காரணம். அப்படி காரணமாக இருந்த அனைத்து அதிகாரிகளையும் இடமாற்றம் செய்ய வேண்டும். கடந்த ஆறு மாதங்களில் கொலை, திருட்டு, பாலியல் வன்கொடுமைகள் என அனைத்தும் செய்தவர்கள் தவெகவினர் தான்.
அனைத்து ஹிந்து கோவில்களையும் ஹிந்துக்கள் ஒன்று சேர்ந்து மீட்க வேண்டும். இல்லாவிட்டால், கோவில்களை கொள்ளை அடித்து விடுவர். அதற்கு உதாரணம் தான் திருப்பரங்குன்றம்.
இவ்வாறு ஹெச். ராஜா கூறினார்.
