ADDED : நவ 23, 2025 11:59 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
தமிழகத்தில், பிற்படுத்தப்பட்டோர் ஆணையம் காலாவதியாகி ஒரு வாரமாகியும், புதிய ஆணையம் அமைக்க, தி.மு.க., அரசு நடவடிக்கை எடுக்கவில்லை. ஓய்வுபெற்ற உயர் நீதிமன்ற நீதிபதி பாரதிதாசன் தலைமையிலான ஆணையத்தின் 3 ஆண்டு பதவி காலம், கடந்த 16ம் தேதியுடன் நிறைவடைந்து விட்டது.
மறுநாள் புதிய ஆணையம் அமைத்திருக்க வேண்டும். ஆனால், தி.மு.க., அரசு தாமதம் செய்கிறது. சமூக நீதிக்கான அமைப்புகள், இயங்கிக் கொண்டே இருந்தால் தான், சமூக நீதி உயிர் வாழும். வன்னியருக்கு உள் இட ஒதுக்கீடு வழங்கக் கூடாது என்பதில், தி.மு.க., அரசு உறுதியாக இருப்பதால், பல முட்டுக்கட்டைகள் போடப்பட்டன. அதைத்தாண்டி, பிற்படுத்தப்பட்டோர் ஆணையம், சமூகநீதிக் கடமையை நிறைவேற்றி இருக்க வேண்டும். ஆனால், ஏமாற்றம் தான் பரிசாக கிடைத்தது. உச்ச நீதிமன்ற தீர்ப்பின் அடிப்படையில், பிற்படுத்தப்பட்டோர் ஆணையம் கட்டாயம் தேவை. இதை உணர்ந்து, ஆணையத்தை, உடனே அமைக்க வேண்டும். - அன்புமணி, தலைவர், பா.ம.க.,

