ADDED : பிப் 08, 2025 12:23 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ராமநாதபுரம்:தமிழக அரசு போக்கு வரத்து கழகங்களில் பணிபுரியும் ஊழியர்கள், பணியின் போது இறந்தால் வாரிசுகளுக்கு கருணை அடிப்படையில் டிரைவர், கண்டக்டர் பணியிடங்கள் வழங்கப்படுகின்றன.
பொதுவாக பணி விதிகளின் படி, பெண் கண்டக்டர்களுக்கு ஆண்களை போல, 160 செ.மீ., உயரம் இருக்க வேண்டும். இதை எதிர்த்து சி.ஐ.டி.யு., உள்ளிட்ட பல்வேறு தொழிற்சங்கத்தினர் தொடர்ந்து போராட்டம் நடத்தி வந்தனர்.
இந்நிலையில், வாரிசு வேலையில் பெண் கண்டக்டர்களுக்கு, 150 செ.மீ., உயரம் இருந்தால் போதுமானது; 45 கிலோ எடை இருக்க வேண்டும் என, உத்தரவிடப்பட்டுள்ளது.