sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

தமிழகம்

/

தலைமை தேர்தல் கமிஷனர் வரும் 23ல் சென்னை வருகிறார்

/

தலைமை தேர்தல் கமிஷனர் வரும் 23ல் சென்னை வருகிறார்

தலைமை தேர்தல் கமிஷனர் வரும் 23ல் சென்னை வருகிறார்

தலைமை தேர்தல் கமிஷனர் வரும் 23ல் சென்னை வருகிறார்


ADDED : பிப் 16, 2024 01:33 AM

Google News

ADDED : பிப் 16, 2024 01:33 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சென்னை:தமிழகத்தில் தேர்தல் ஏற்பாடுகள் குறித்து ஆய்வு செய்வதற்காக, தலைமை தேர்தல் கமிஷனர் ராஜிவ்குமார் தலைமையிலான குழுவினர், வரும் 23ம் தேதி காலை சென்னை வருகின்றனர்.

காலை 11:30 முதல் பகல் 1:00 வரை, தேர்தல் கமிஷன் அங்கீகாரம் பெற்ற, அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகளை சந்தித்து பேசுகின்றனர். மதியம் 2:00 மணி முதல் இரவு 8:00 வரை, மாவட்ட கலெக்டர்கள், எஸ்.பி.,க்கள் ஆய்வுக் கூட்டத்தில் பங்கேற்கின்றனர்.

மறுநாள் காலை 9:00 முதல் 11:00 வரை, தமிழ்நாடு, கர்நாடகா, கேரளா மாநில தலைமைத் தேர்தல் அதிகாரிகள் மற்றும் போலீஸ் ஒருங்கிணைப்பு அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்துகின்றனர்.

பின், பகல் 1:00 மணி வரை, வருமான வரி, சுங்கத் துறை உள்ளிட்ட அலுவலர்கள் ஆய்வுக் கூட்டத்தில் பங்கேற்கின்றனர். பகல் 2:00 மணி முதல் மாலை 3:00 வரை, தலைமைச் செயலர் மற்றும் டி.ஜி.பி.,யுடன் ஆலோசனை நடத்துகின்றனர்.

அதன்பின், பத்திரிகையாளர் சந்திப்பு நடக்க உள்ளது. மாலை 3:45 மணிக்கு டில்லி திரும்புகின்றனர்.

இதற்கான ஏற்பாடுகளை, தமிழகத் தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹு செய்துள்ளார்.






      Dinamalar
      Follow us