பாடகி பி.சுசீலாவுக்கு கலை வித்தகர் விருது வழங்கினார் முதல்வர்
பாடகி பி.சுசீலாவுக்கு கலை வித்தகர் விருது வழங்கினார் முதல்வர்
ADDED : அக் 04, 2024 11:13 AM

சென்னை: சென்னை தலைமை செயலகத்தில் நடந்த நிகழ்ச்சியில், பாடகி பி.சுசீலாவுக்கு கலைத்துறை வித்தகர் விருதை முதல்வர் ஸ்டாலின் வழங்கினார்.
பாடகி பி.சுசீலா, 70 ஆண்டுக்கும் மேலான தன் இசைப்பயணத்தில் 25 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பாடல்களை தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னட மொழிகளில் பாடி சாதனை படைத்தவர். அவருக்கும், கவிஞர் மு.மேத்தாவுக்கும் 'கருணாநிதி கலைத்துறை வித்தகர் விருது' வழங்கப்படும் என முதல்வர் ஸ்டாலின் அறிவித்தார்.
இன்று (அக்.,04) சென்னை தலைமை செயலகத்தில் நடந்த நிகழ்ச்சியில் விருதுகள் வழங்கப்பட்டன. குடும்பத்துடன் வந்த பாடகி பி.சுசீலாவுக்கு கலைத்துறை வித்தகர் விருதை முதல்வர் ஸ்டாலின் வழங்கி அவரிடம் உரையாடினார். விருதுடன் ரூ.10 லட்சம் ரொக்கமும், நினைவுப்பரிசும் வழங்கப்பட்டது. நிகழ்ச்சியில், கவிஞர் மு.மேத்தாவுக்கும் முதல்வர் ஸ்டாலின் விருது வழங்கி கவுரவித்தார்.