பணிபுரியும் மகளிர் விடுதி முதல்வர் திறந்து வைத்தார்
பணிபுரியும் மகளிர் விடுதி முதல்வர் திறந்து வைத்தார்
ADDED : ஜன 04, 2024 11:05 PM

சென்னை: செங்கல்பட்டு மாவட்டத்தில் கட்டப்பட்டுள்ள, பணிபுரியும் மகளிருக்கான விடுதி உள்ளிட்ட புதிய கட்டடங்களை, முதல்வர் ஸ்டாலின் திறந்து வைத்தார்.
சமூக நலத்துறை வாயிலாக, செங்கல்பட்டு மாவட்டம் தாம்பரம் சானடோரியம் ஹோம் சாலையில், 18 கோடி ரூபாய் மதிப்பீட்டில், 461 படுக்கைகளுடன் கட்டப்பட்டுள்ள பணிபுரியும் மகளிர் விடுதி
134 கோடி ரூபாய் செலவில் அமைக்கப்பட்டுள்ள ஆறு புதிய மீன் இறங்குதளங்கள் மற்றும் நான்கு மேம்படுத்தப்பட்ட மீன் இறங்கு தளங்கள்
மீன்வள பல்கலை கழகத்தின் கீழ் செயல்படும், துாத்துக்குடி மீன்வள கல்லுாரி மற்றும் ஆராய்ச்சி நிலையம், நாகப்பட்டினம் மாவட்டம் தலைஞாயிறு, டாக்டர் எம்.ஜி.ஆர்., மீன்வள கல்லுாரி மற்றும் ஆராய்ச்சி நிலையம் ஆகியவற்றில், 11.65 கோடி ரூபாய் செலவில் கட்டப்பட்டுள்ள புதியகட்டடங்கள்
காவல்துறை சார்பில் 18.20 கோடி ரூபாய் செலவில் கட்டப்பட்டுள்ள, 62 காவலர் குடியிருப்புகள், இரு காவல் நிலையங்கள், திருநெல்வேலி மாவட்ட ஆயுதப்படைகளுக்கு கட்டப்பட்டுள்ள இரு ஒருங்கிணைந்த நிர்வாக கட்டடங்களை, 'வீடியோ கான்பரன்ஸ்' வாயிலாக முதல்வர் ஸ்டாலின் திறந்து வைத்தார்.