ரூ.1,248 கோடியில் அமைத்த சாலைகள் ரயில்வே மேம்பாலங்களை திறந்தார் முதல்வர் முதல்வர் திறந்து வைத்தார்
ரூ.1,248 கோடியில் அமைத்த சாலைகள் ரயில்வே மேம்பாலங்களை திறந்தார் முதல்வர் முதல்வர் திறந்து வைத்தார்
ADDED : நவ 02, 2025 01:03 AM

சென்னை: ஈரோடு, மதுரை, திருவள்ளூர் உள்ளிட்ட மாவட்டங்களில், 1,248 கோடி, 24 லட்சம் ரூபாயில் அமைக்கப்பட்ட சாலைகள், ரயில்வே மேம்பாலங்களை முதல்வர் ஸ்டாலின் திறந்து வைத்தார்.
தமிழக நெடுஞ்சாலைத் துறை சார்பில் ஈரோடு, திருவாரூர், மயிலாடுதுறை, தஞ்சை, திருவள்ளூர், நெல்லை, அரியலுார், மதுரை ஆகிய மாவட்டங்களில், 1,177 கோடி, 15 லட்சம் ரூபாய் செலவில், 10 சாலைகள் அமைக்கப்பட்டு உள்ளன.
வேலுார் மாவட்டத்தில், 71 கோடி, 9 லட்சம் ரூபாய் செலவில், இரண்டு ரயில்வே மேம்பாலங்கள் அமைக்கப்பட்டு உள்ளன. மொத்தம் 1,248 கோடி, 24 லட்சம் ரூபாய் செலவில், இப்பணிகள் முடிக்கப் பட்டு உள்ளன.
சென்னை தலைமைச் செயலகத்தில் நேற்று நடந்த நிகழ்ச்சியில், துறை அமைச்சர் வேலு முன்னிலையில், வீடியோ கான்பரன்ஸ் வாயிலாக, சாலை பணிகள், ரயில்வே மேம்பாலங்களை முதல்வர் ஸ்டாலின் திறந்து வைத்தார்.
மக்கள் நல்வாழ்வுத் துறை சார்பில், 18 கோடி, 90 லட்சத்து, 46,000 ரூபாயில், 87 ஆம்புலன்ஸ் வாகனங்கள் வாங்கப்பட்டு உள்ளன.
அவற்றின் சேவையை, முதல்வர் ஸ்டாலின் கொடியசைத்து துவக்கி வைத்தார். மேலும், தமிழக வீட்டுவசதி வாரியத்தில் தேர்வு செய்யப்பட்ட 60 பேருக்கு, பணி நியமன ஆணைகளையும் அவர் வழங்கினார்.

