முதல்வருக்கு 6வது நாளாக சிகிச்சை; இன்றும் மருத்துவமனையில் இருந்தபடியே அரசு பணி!
முதல்வருக்கு 6வது நாளாக சிகிச்சை; இன்றும் மருத்துவமனையில் இருந்தபடியே அரசு பணி!
UPDATED : ஜூலை 26, 2025 12:41 PM
ADDED : ஜூலை 26, 2025 12:24 PM

சென்னை: சென்னை அப்போலோ மருத்துவமனையில் 6வது நாளாக சிகிச்சை பெற்று வரும் முதல்வர் ஸ்டாலின் இன்றும் மருத்துவமனையில் இருந்தபடியே அரசு பணியை செய்தார்.
தமிழக முதல்வரும், தி.மு.க., தலைவருமான ஸ்டாலினுக்கு, 72, கடந்த, 21ம் தேதி காலை நடைபயிற்சியில் ஈடுபட்டிருந்த போது, திடீரென தலைச்சுற்றல் ஏற்பட்டது. உடனே சிகிச்சைக்காக, சென்னை ஆயிரம் விளக்கு பகுதியில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
ஸ்டாலினுக்கு, இதயத் துடிப்பை சீராக வைக்க உதவும், 'பேஸ் மேக்கர்' கருவி பொருத்தப்பட்டுள்ளது. அங்கு, இன்றுடன் 6வது நாளாக முதல்வர் ஸ்டாலினுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில் இன்று முதல்வர் ஸ்டாலினை கனிமொழி, மா.சுப்பிரமணியன், அழகிரி ஆகியோர் மருத்துவமனையில் நேரில் சந்தித்து நலன் விசாரித்தனர். சிகிச்சைக்கு பின் ஓய்வில் இருந்த முதல்வர் ஸ்டாலின் அரசு பணிகளை தொடங்கினார்.
அரசின் திட்டங்கள் குறித்து அதிகாரிகளுடன் முதல்வர் ஸ்டாலின் ஆலோசனை நடத்தினார்.

