பிரிட்டன், ஜெர்மனி நாடுகளுக்கு இம்மாத இறுதியில் செல்கிறார் முதல்வர்
பிரிட்டன், ஜெர்மனி நாடுகளுக்கு இம்மாத இறுதியில் செல்கிறார் முதல்வர்
ADDED : ஆக 12, 2025 03:18 AM

சென்னை: பிரிட்டன், ஜெர்மனியில் செயல்படும் தொழில் நிறுவனங்களின் முதலீட்டை தமிழகத்திற்கு ஈர்க்க, முதல்வர் ஸ்டாலின் இம்மாத இறுதியில் அந்நாடுகளுக்கு அரசு முறை பயணம் மேற்கொள்ள உள்ளார்.
தமிழகத்தை, 2030க்குள் ஒரு டிரில்லியன் அதாவது, 86 லட்சம் கோடி ரூபாய் மதிப்புள்ள பொருளாதாரமாக முன்னேற்ற, மாநில அரசு திட்டமிட்டுள்ளது. இதற்காக, பல்வேறு நாடுகளின் முதலீடுகளை ஈர்க்கும் பணியில், தொழில் துறை அதிகாரிகள் ஈடுபட்டுள்ளனர்.
அதன்படி, பிரிட்டன், ஜெர்மனியில் செயல்படும் தொழில் நிறுவனங்களின் முதலீடுகளை தமிழகத்திற்கு ஈர்ப்பதற்காக, முதல்வர் ஸ்டாலின் தலைமையிலான குழு, 10 நாள் பயணமாக, இம்மாத இறுதியில் அந்நாடுகளுக்கு செல்ல உள்ளது.
இக்குழுவில், தொழில் துறை அமைச்சர் ராஜா உள்ளிட்டோரும் இடம் பெறுகின்றனர். இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு, இந்த வார இறுதியில் வெளியாகிறது.
ஏற்கனவே, ஐக்கிய அரபு நாடுகள், துபாய், சிங்கப்பூர், ஜப்பான், ஸ்பெயின், அமெரிக்கா நாடுகளுக்கு முதலீட்டை ஈர்ப்பதற்காக, ஸ்டாலின் சென்று வந்துள்ளார்.