தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/தமிழகம்/ 'விஜய்க்கு முதல்வர் பதவி கடினமானது அல்ல'

 'விஜய்க்கு முதல்வர் பதவி கடினமானது அல்ல'

 'விஜய்க்கு முதல்வர் பதவி கடினமானது அல்ல'


ADDED : மே 11, 2026 05:20 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : மே 11, 2026 05:20 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

சென்னை: ''நிர்வாகத்திறன் மிக்க விஜய்க்கு, முதல்வர் பதவி என்பது கடினமானது அல்ல,'' என, எழுத்தாளர் ஜெயமோகன் தெரிவித்துள்ளார்.

அவரது அறிக்கை:


தமிழக முதல்வராக விஜய் பொறுப்பேற்றுள்ளார். அவரது 'சர்க்கார்' படத்திற்கு நான் வசனம் எழுதியுள்ளேன். அந்த படத்தின் இறுதியில், அவருக்கு எதிராக ஆளும்கட்சியும் எதிர்க்கட்சியும் இணைவது வரை, கிட்டத்தட்ட எல்லாமே, அவரது அரசியலிலும் நடந்தன. நான் அறிந்தவரை, விஜய் நிர்வாகத்திறன் மிக்கவர். அவருடைய திரை திட்டமிடல், பொருளியல் திட்டமிடல் இரண்டுமே அப்பழுக்கற்றவை.

அரசியலிலும் அவ்வாறே என அறிகிறேன். உடன் இருப்போரை நுணுக்கமாக புரிந்து கொள்பவர். அவர்களை எப்போதுமே தன் ஆளுகைக்குள் வைத்துக் கொள்பவர். விஜயை பிறர் கையாள்வது என்பது, முற்றிலும் இயலாதது என்பதை நான் அறிவேன். கடந்த 20 ஆண்டுகளாக, அவர்தான் பிறரை இயல்பாகவே தனக்காக கையாள்கிறார்.

'சர்க்கார்' படம், விஜயின் அரசியல் இலக்குகளை சொல்வதற்காகவே எழுதி, எடுக்கப்பட்ட படம். அவரே வகுத்தளித்த பார்வைகளே அதில் உள்ளன. ஆனால், அவர் என்ன சிந்திக்கிறார் என்பதை, அவரே சொல்லாமல், அணுக்கமானவர்கள் கூட புரிந்து கொள்ள முடியாது என்பர்.

தன் இலக்குகள் நோக்கி, துல்லியமான திட்டமிடலுடன் சென்று கொண்டிருப்பவர் விஜய். கிறிஸ்துவ நம்பிக்கை கொண்டவர்; ஆனால், குடும்பச் சூழலில் இருந்து உருவான இயல்பானதும், மிக வலுவானதுமான, மதச்சார்பின்மை பார்வை அவருக்கு உண்டு. இது அவருடைய தனித்தகுதி.

இறுதி நேரத்தில் ஆதரவு தேடும்போது கூட, மதச்சார்பற்றோரை மட்டுமே அவர் தேர்ந்தெடுத்தது, என்னை வியக்க வைக்கவில்லை. முதல்வர் பதவியும் பணியும் அவருக்கு கடினமானதல்ல. தமிழ் மக்கள் ஒரு மாற்றத்தை விரும்பி உள்ளனர். அவர்கள் விரும்பியபடி, நல்லன நிகழ்க.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us