சிவில் சர்வீசஸ் மாதிரி தேர்வு டிசம்பர் 10க்குள் விண்ணப்பிக்கலாம்
சிவில் சர்வீசஸ் மாதிரி தேர்வு டிசம்பர் 10க்குள் விண்ணப்பிக்கலாம்
UPDATED : நவ 30, 2026 12:00 AM
ADDED : நவ 29, 2026 10:03 PM
சென்னை: சிவில் சர்வீசஸ் மாதிரி ஆளுமை தேர்வில் பங்கேற்க, முதன்மை தேர்வில் தேர்ச்சி பெற்றவர்கள், டிசம்பர், 10ம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம் என, தமிழக அரசு அறிவித்து உள்ளது.
மத்திய அரசு பணியாளர் தேர்வாணையம் எனும் யு.பி.எஸ்.சி., சிவில் சர்வீசஸ் தேர்வை எழுதும் தேர்வர்களுக்கு, தமிழக அரசின் அகில இந்திய குடிமைப்பணி தேர்வு மையத்தில், பயிற்சிகள் வழங்கப்படுகின்றன.
இங்கு படித்து, 2026ம் ஆண்டுக்கான சிவில் சர்வீசஸ் முதன்மை தேர்வில் பங்கேற்றவர்களில், 29 பெண்கள் உள்பட, 79 பேர் தேர்ச்சி பெற்றனர்.
இந்நிலையில், தமிழக அரசின் அகில இந்திய குடிமைப்பணி தேர்வு பயிற்சி மையத்தில், சிவில் சர்வீசஸ் பதவிக்கான மாதிரி ஆளுமை தேர்வுகள் நடத்தப்பட உள்ளன. இத்தேர்வுகள், டிச., 17, 18, 19ம் தேதிகளில் நடக்கிறது.
இதற்கு, சிவில் சர்வீசஸ் முதன்மை தேர்வில் தேர்ச்சி பெற்ற தேர்வர்கள், டிச., 10ம் தேதிக்குள் www.civilservicecoaching.com என்ற இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம்.
விண்ணப்பித்த விபரங்களை, aicscc.gov.gmail.com என்ற இ – மெயில் முகவரிக்கு அனுப்ப வேண்டும் என, தமிழக அரசு தெரிவித்துள்ளது.
