sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, மார்ச் 28, 2026 ,பங்குனி 14, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

தமிழகம்

/

அதிக வாக்காளர்கள் கொண்ட தொகுதி சோழிங்கநல்லூர்: குறைந்த வாக்காளர் கொண்ட தொகுதி துறைமுகம்

/

அதிக வாக்காளர்கள் கொண்ட தொகுதி சோழிங்கநல்லூர்: குறைந்த வாக்காளர் கொண்ட தொகுதி துறைமுகம்

அதிக வாக்காளர்கள் கொண்ட தொகுதி சோழிங்கநல்லூர்: குறைந்த வாக்காளர் கொண்ட தொகுதி துறைமுகம்

அதிக வாக்காளர்கள் கொண்ட தொகுதி சோழிங்கநல்லூர்: குறைந்த வாக்காளர் கொண்ட தொகுதி துறைமுகம்

2


UPDATED : பிப் 23, 2026 04:43 PM

ADDED : பிப் 23, 2026 04:31 PM

Google News

2

UPDATED : பிப் 23, 2026 04:43 PM ADDED : பிப் 23, 2026 04:31 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சென்னை: இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிட்ட நிலையில் அதிக வாக்காளர்கள் கொண்ட தொகுதியாக சோழிங்கநல்லூரும், குறைந்த வாக்காளர்கள் கொண்ட தொகுதியாக துறைமுகமும் உள்ளன.

இறுதி வாக்காளர் பட்டியலை வெளியிட்டு, தமிழக தலைமை தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்நாயக் கூறியதாவது: எஸ்ஐஆர் பணிக்கு பிறகு கடந்த ஆண்டு டிச.,19 ல் வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டது. அதில் மொத்தம் 5.43 கோடி வாக்காளர்கள் இருந்தனர்.இதன் பிறகு, பெயர் சேர்ப்புஉள்ளிட்ட பணிகள் நிறைவு பெற்று இன்று இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.

அதில் மொத்தம் 5.67 கோடி வாக்காளர்கள் இடம்பெற்றுள்ளனர்.

ஆண்கள் -2,77,38,925 பேர்

பெண்கள்: 2,89,60,838 பேர்

3ம் பாலினத்தவர் - 7,617 பேர்.

18 - 19 வயதுள்ள வாக்காளர்களின் எண்ணிக்கை 12.51 லட்சம்

மாற்றுத்திறனாளி வாக்காளர்கள் :4.62 லட்சம்

85 வயதுக்கு மேற்பட்ட குடிமக்கள்:3.99 லட்சம்

வரைவு வாக்காளர் பட்டியலை காட்டிலும் இறுதி வாக்காளர் பட்டியலில் 23.30 லட்சம் பேர் சேர்க்கப்பட்டு உள்ளனர்.

எஸ்ஐஆருக்கு முன்னர் 6.41 கோடி வாக்காளர்கள் இருந்தனர்.

எஸ்ஐஆர் பணிக்கு பிறகு 5.67 கோடி வாக்காளர்கள் பட்டியலில் இடம்பெற்றுள்ளனர். மொத்தம் 74.07 லட்சம் பேர் நீக்கப்பட்டு உள்ளனர். வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க மீண்டும் விண்ணப்பம் செய்யலாம்.

தமிழகத்தில் அதிக வாக்காளர்கள் கொண்ட தொகுதியாக சோழிங்கநல்லூர் உள்ளது. இங்கு 5,36,991 பேர் உள்ளனர். குறைந்த வாக்காளர்கள் கொண்ட தொகுதியாக துறைமுகம் உள்ளது. இங்கு 1,16,896 வாக்காளர்கள் உள்ளனர். வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க மீண்டும் விண்ணப்பம் செய்யலாம்.இவ்வாறு அவர் கூறினார்.

முதல்வர் ஸ்டாலினின் கொளத்தூர் தொகுதியில் 2,07,251 பேர் உள்ளனர். அங்கு 83,402 பேர் நீக்கப்பட்டு உள்ளனர்.துணை முதல்வர் உதயநிதியின் சேப்பாக்கம் - திருவல்லிக்கேணி தொகுதியில் 1,63,866 வாக்காளர்கள் உள்ளனர்.நயினார் நாகேந்திரனின் நெல்லை தொகுதியில் 2,73,520 வாக்காளர்கள் உள்ளனர்.

சென்னை மாவட்டத்தை பொறுத்த வரை

இங்கு எஸ்ஐஆருக்கு முன்னர் 40,04,694 வாக்காளர்கள் இருந்தனர். எஸ்ஐஆருக்கு பிறகு வரைவு வாக்காளர் பட்டியலில் 25,79,676 பேரும்

இறுதி வாக்காளர் பட்டியலில் 28,30,936 பேரும் உள்ளனர்.

அதிகபட்சமாக பெரம்பூரில் 2,22,792 பேரும், குறைந்தபட்சமாக சேப்பாக்கத்தில் 1,16,896 பேரும் உள்ளனர்.






      Dinamalar
      Follow us