வங்கக்கடலில் நிலவிய ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு வலுவிழந்தது; வானிலை மையம் அறிவிப்பு
வங்கக்கடலில் நிலவிய ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு வலுவிழந்தது; வானிலை மையம் அறிவிப்பு
ADDED : அக் 23, 2025 10:05 AM

புதுடில்லி: வங்கக்கடலில் நிலவிய ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி வலுவிழந்தது என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இது குறித்து வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கை: தென்மேற்கு வங்கக் கடலில் நிலவிய ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி, வடமேற்கு திசையில் நகர்ந்து, நேற்று காலை நிலவரப்படி, தமிழக கடலோர பகுதிகளுக்கு அப்பால் நிலவியது.
இன்று வங்க கடலில் நிலவிய ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி வலுவிழந்தது. ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி, காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுவிழந்தது. உள் தமிழகம், தெற்கு கர்நாடகா இடையே நிலை கொண்டுள்ளது. அடுத்த 24 மணி நேரத்தில் மேலும் வலுவிழக்கும்.
தமிழகத்தில் ஒரு சில இடங்கள், புதுச்சேரியில் இன்றும், நாளையும் இடி, மின்னலுடன் லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளது. தமிழக வட கடலோர பகுதிகள், தெற்கு ஆந்திர கடலோர பகுதிகளில் சூறாவளி காற்று வீசக்கூடும் என்பதால், மீனவர்கள் இப்பகுதிகளுக்கு செல்ல வேண்டாம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.