sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

தமிழகம்

/

ஒற்றுமை இல்லாததே காரணம்; தேர்தல் முடிவுக்குப் பின் திருமா கண்டுபிடிப்பு

/

ஒற்றுமை இல்லாததே காரணம்; தேர்தல் முடிவுக்குப் பின் திருமா கண்டுபிடிப்பு

ஒற்றுமை இல்லாததே காரணம்; தேர்தல் முடிவுக்குப் பின் திருமா கண்டுபிடிப்பு

ஒற்றுமை இல்லாததே காரணம்; தேர்தல் முடிவுக்குப் பின் திருமா கண்டுபிடிப்பு

47


UPDATED : பிப் 09, 2025 05:41 PM

ADDED : பிப் 09, 2025 03:18 PM

Google News

UPDATED : பிப் 09, 2025 05:41 PM ADDED : பிப் 09, 2025 03:18 PM

47


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சென்னை: டில்லியில் பா.ஜ., ஆட்சி அமைப்பதற்கு ஆம் ஆத்மி, காங்கிரஸ் கட்சிகள் இடையே ஒற்றுமை இல்லை என்பதே முதன்மையான காரணம் என்று வி.சி.க., பொதுச்செயலாளர் திருமாவளவன் தெரிவித்துள்ளார்.

அவரது அறிக்கை: டில்லி மாநிலத் தேர்தலில் ஆளும் கட்சியாக இருந்த ஆம் ஆத்மி தோல்வி அடைந்து பா.ஜ., ஆட்சி அமைக்கிறது. இது ஆம் ஆத்மி கட்சியின் தோல்வி மட்டுமல்ல இண்டி கூட்டணியின் தோல்வி ஆகும். இதிலிருந்து இண்டி கூட்டணி பாடம் கற்க வேண்டும். டில்லி மாநிலத் தேர்தல் முடிவு இண்டி கூட்டணியின் ஒற்றுமையை வலியுறுத்துகிறது என்பதை விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சார்பில் சுட்டிக் காட்டுகிறோம்.

இந்த சூழலில் காங்கிரஸ் கட்சி உடனடியாக இண்டி கூட்டணி கட்சிகளின் கூட்டத்தைக் கூட்டுவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும். டில்லியில் ஆட்சி நடத்தி வந்த ஆம் ஆத்மியை அதிகாரத்திலிருந்து இறக்குவதற்காக பா.ஜ., தனது அத்தனை பலத்தையும் பயன்படுத்தியது. முதலமைச்சராக இருந்த அர்விந்த் கெஜ்ரிவால் உள்ளிட்டவர்கள் மீதும் அமைச்சர்கள் மீதும் வழக்குகள் போடப்பட்டு சிறைப்படுத்தப்பட்டனர். அதிகாரிகள் நியமனம், அன்றாட நிர்வாகம் ஆகியவற்றைச் செய்வதற்கு டில்லி அரசுக்கு அதிகாரம் உள்ளது என்று உச்ச நீதிமன்றத்தின் 5 நீதிபதிகள் கொண்ட அரசியல் சாசன அமர்வு அளித்த தீர்ப்பை ரத்து செய்வதற்காக பார்லிமென்டை பயன்படுத்தி உடனடியாக சட்டத் திருத்தத்தை பா.ஜ., அரசு கொண்டு வந்தது.

மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஆம் ஆத்மி அரசை செயல்படவிடாமல் முடக்கியது. இந்த அடாவடிகளுக்கு இண்டி கூட்டணியின் தலைமைப் பொறுப்பில் இருக்கும் காங்கிரஸ் கட்சி பெரிதாக எதிர்ப்பு எதுவும் தெரிவிக்கவில்லை. காங்கிரஸ் தனக்கு போட்டியாக ஆம் ஆத்மியைப் பார்த்ததும், காங்கிரஸ் பலவீனமாவது தனக்கு சாதகம் என ஆம்ஆத்மி கருதியதுமே இதற்குக் காரணம். இண்டி கூட்டணியில் ஆம் ஆத்மி இடம் பெற்ற போதும் அது பொருந்தாக் கூட்டணியாகவே இருந்தது. டில்லியில் இப்போது பா.ஜ., ஆட்சி அமைப்பதற்கு ஆம் ஆத்மி, காங்கிரஸ் கட்சிகள் இடையே ஒற்றுமை இல்லை என்பதே முதன்மையான காரணம் என விடுதலைச் சிறுத்தைகள் கருதுகிறது.

டில்லி தேர்தலில் ஆம் ஆத்மியை விட சுமார் இரண்டு சதவீத வாக்குகளையே பா.ஜ., கூடுதலாகப் பெற்றிருக்கிறது. அங்கு தனியாகப் போட்டியிட்ட காங்கிரஸ் சுமார் ஏழு சதவீத வாக்குகளைப் பெற்றிருக்கிறது. அர்விந்த் கெஜ்ரிவால் போட்டியிட்ட தொகுதி உட்பட 13 தொகுதிகளில் ஆம் ஆத்மியின் தோல்விக்கு காங்கிரஸ் பெற்ற வாக்குகளே காரணமாகியுள்ளன.

டில்லி தேர்தலில் ஆம் ஆத்மிக்கு இண்டி கூட்டணியில் இருக்கும் சமாஜ்வாதி, சரத் பவாரின் தேசியவாத காங்கிரஸ், ராஷ்ட்ரிய ஜனதா தளம் உள்ளிட்ட சில கட்சிகள் ஆதரவு தெரிவித்தன. ஆதரவு தெரிவித்த அந்தக் கட்சிகளுக்கு டில்லியில் வாக்கு வங்கி எதுவும் இல்லை. எனவே அது காங்கிரஸ் அல்லாத அணி ஒன்றை உருவாக்கும் முயற்சியாகவே பார்க்கப்பட்டது.

டில்லி தேர்தலில் பா.ஜ., வெற்றி பெறுவதற்கு காங்கிரஸ் எப்படி காரணமாக அமைந்து விட்டதோ, அப்படி இண்டி கூட்டணியில் இருந்த பிற கட்சிகளின் இந்த அணுகுமுறையும் ஒருவிதத்தில் காரணமாகியுள்ளன. பார்லிமென்ட் தேர்தல் முடிந்ததற்குப் பிறகு இண்டி கூட்டணி கூட்டத்தைக் கூட்டுவதில் காங்கிரஸ் அக்கறை காட்டவில்லை. பார்லிமென்ட் தேர்தலில் பா.ஜ.,வுக்குப் பெரும்பான்மை கிடைப்பதைத் தடுத்த போதிலும் அதன் பிறகு நடைபெற்ற மாநிலத் தேர்தல்களில் பா.ஜ., வெற்றி பெறுவதற்கு இண்டி கூட்டணியே வழி வகுத்தது என்பதே கசப்பான உண்மையாகும்.

மக்கள் நலனை விடத் தத்தமது கட்சிகளின் வெற்றியையே இண்டி கூட்டணி கட்சிகள் முதன்மையாகக் கருதுகின்றன என்பதையே இது காட்டுகிறது. இதே நிலை நீடித்தால் அடுத்தடுத்து பீகாரிலும், உத்தரப்பிரதேசத்திலும் நடைபெறவிருக்கும் தேர்தல்களிலும் இண்டி கூட்டணி வெற்றி பெறுவது சாத்தியமில்லாமல் ஆகிவிடும். மக்களும்கூட நம்பிக்கை இழந்து விடுவார்கள்.

எனவே டில்லி தேர்தல் முடிவுகளை இண்டிகூட்டணி கட்சிகள் ஒரு படிப்பினையாக எடுத்துக் கொள்ள வேண்டும். இண்டி கூட்டணியின் கலந்தாய்வுக் கூட்டத்தைக் கூட்டுவதற்கு காங்கிரஸ் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்துகிறோம்.

தமிழகத்தில் ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் தி.மு.க., மகத்தான வெற்றியைப் பெற்றிருக்கிறது. தொடர் வெற்றியை சாதித்திருக்கும் தி.மு.க., தலைவர் ஸ்டாலினுக்கு எமது வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறோம். அதாவது, நா.த.க., மற்றும் அ.தி.மு.க., பா.ஜ., ஆகிய கட்சிகளிடையே மறைமுகமான கூட்டணி ஒரு சோதனை முயற்சியாக மேற்கொள்ளப்பட்டுள்ளது என்றே எண்ணத் தோன்றுகிறது.

இதுவரை தமிழகத்தில் இல்லாத அளவுக்கு வெளிப்படையான வெறுப்பு அரசியலை நா.த.க., முன்னெடுத்தது. குறிப்பாக, ஈ.வெ.ரா.வை மிகவும் அநாகரிகமான முறையிலே பொது வெளியில் கொச்சைப்படுத்தியது. ஆனாலும் அதனை அ.தி.மு.க., கண்டும் காணாமல் கடந்து சென்ற போக்கு அதிர்ச்சியளித்தது. அதேவேளையில், பா,ஜ., வரிந்து கட்டிக்கொண்டு நா.த.க., வின் வெறுப்பு அரசியலை வரவேற்றது. இவ்விரு கட்சிகளின் இந்தப் போக்கு அவர்களுக்கிடையிலான மறைமுக உடன்பாட்டினை உறுதிப்படுத்துவதாகவே விளங்கியது.

இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.






      Dinamalar
      Follow us