ADDED : பிப் 10, 2024 12:12 AM
காஞ்சிபுரம், ராணிப்பேட்டை, திருப்பத்துார், பெரம்பலுார், மயிலாடுதுறை, தென்காசி ஆகிய ஆறு மாவட்டங்களில், அரசு மருத்துவ கல்லுாரிகள் இல்லை. '10 லட்சம் மக்கள் தொகைக்கு, 100 மருத்துவ மாணவர் சேர்க்கை இடங்கள் மட்டுமே அனுமதிக்கப்படும்' என்ற புதிய விதிமுறையின்படி, அடுத்த ஆண்டு முதல் தமிழகத்தில் புதிய மருத்துவ கல்லுாரிகள் துவங்க முடியாது; மாணவர் சேர்க்கை இடங்களையும் அதிகரிக்க முடியாது. இது, மருத்துவ கல்வி வளர்ச்சியில் பின்னடைவை ஏற்படுத்தும்.
தமிழக அரசு நினைத்திருந்தால், அதன் சொந்த நிதியில், கடந்த மூன்று ஆண்டுகளில், அனைத்து மாவட்டங்களிலும் மருத்துவ கலலுாரிகளை துவங்கி இருக்க முடியும். ஆனால், வெற்று வசனம் பேசியே மூன்று ஆண்டுகளை வீணடித்து விட்டது.
கடந்த மூன்று ஆண்டு கால தி.மு.க., ஆட்சியில், ஒரு புதிய மருத்துவ கல்லுாரி கூட துவங்கப் படவில்லை. ஒரு எம்.பி.பி.எஸ்., இடம் கூட உருவாக்கப்படவில்லை. இதை மன்னிக்கவே முடியாது. இந்த அவப்பெயரை, தி.மு.க., அரசு சுமக்க போகிறது.
- அன்புமணி
பா.ம.க., தலைவர்.