ADDED : அக் 02, 2025 06:18 PM
75 ஆண்டுகளுக்கு முன்பு தினமலர் தொடங்கப்பட்டபோது, நிறுவனர் டி.வி.ராமசுப்பையர் எழுதியிருந்த தலையங்கம், இன்றுவரை தினமலர் தொடர்ந்து பின்பற்றி வருகின்ற கொள்கை பிரகடனம் எனலாம்.
அதன் சில வாக்கியங்களை மட்டும் இங்கே பார்க்கலாம்:
ஜன சமூகம் இன்னல்கள் நீங்கி, இன்ப நிலை அடைவதற்கு எமது சக்திக்கு இயன்ற அளவு தொண்டாற்றும் ஒரே நோக்கத்துடன் தினமலர் பத்திரிகையை தொடங்கி இருக்கிறோம்.
மக்களின் முன்னேற்றத்துக்காக உழைப்போம் என்ற சபதத்தை மனதில் நிறுத்தி, இந்த புது முயற்சியில் இறங்கி இருக்கிறோம்.
வகுப்புவாதிகள், மத வெறியர்கள், பிற்போக்கு கும்பல்கள், குழப்பம் செய்பவர்கள், நாட்டை காட்டிக் கொடுப்பவர்கள், தமிழ் இனத்துக்கு துரோகம் செய்பவர்கள் எமது விரோதிகள்; அவர்களை முறியடிக்க தினமலர் முன்னணியில் நின்று பணியாற்றும்.
அதே சமயம், அவர்களை அழித்து ஒழிக்கும் நோக்கம் தினமலருக்கு கிடையாது. அவர்களை சீர்திருத்தி நல்வழிக்கு கொண்டுவர தினமலர் பாடுபடும்.