sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

தமிழகம்

/

த.வெ.க., முதல் பொதுக்குழு கூட்டத்தில் 17 தீர்மானங்கள் நிறைவேற்றம்

/

த.வெ.க., முதல் பொதுக்குழு கூட்டத்தில் 17 தீர்மானங்கள் நிறைவேற்றம்

த.வெ.க., முதல் பொதுக்குழு கூட்டத்தில் 17 தீர்மானங்கள் நிறைவேற்றம்

த.வெ.க., முதல் பொதுக்குழு கூட்டத்தில் 17 தீர்மானங்கள் நிறைவேற்றம்

37


UPDATED : மார் 28, 2025 01:42 PM

ADDED : மார் 28, 2025 09:01 AM

Google News

UPDATED : மார் 28, 2025 01:42 PM ADDED : மார் 28, 2025 09:01 AM

37


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சென்னை: சென்னையில் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் பொதுக்குழு கூட்டம் அக்கட்சி தலைவரும், நடிகருமான விஜய் தலைமையில் நடந்தது. இதில் 17 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை துவக்கி உள்ளார். இக்கட்சியின் இரண்டாம் ஆண்டு விழா மாமல்லபுரத்தில், பிப்ரவரி 26ம் தேதி நடந்தது. அதற்கு முன் விக்கிரவாண்டியில் முதல் மாநாடு நடந்தது. இந்நிலையில், இன்று (மார்ச் 28) சென்னை திருவான்மியூரில் உள்ள ராமசந்திரா கன்வென்ஷன் சென்டரில் த.வெ.க., முதல் பொதுக்குழு கூட்டம் நடந்தது. கூட்டத்தில் 17 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

17 தீர்மானங்கள் என்னென்ன?

* வக்பு சட்டத்திருத்த மசோதாவிற்கு எதிராக தீர்மானம்.

* இருமொழி கொள்கைக்கு ஆதரவாக தீர்மானம்.

* பரந்தூரில் புதிய விமான நிலையம் அமைக்கக் கூடாது என வலியுறுத்தி தீர்மானம்.

* சமூக நீதியை நிலைநிறுத்த, ஜாதிவாரி கணக்கெடுப்பு நடத்த வேண்டும் என தீர்மானம்.

* டாஸ்மாக்கின் ஆயிரம் கோடி ரூபாய் முறைகேடு விவகாரத்தில் உரிய விசாரணை நடத்தப்பட வேண்டும் என வலியுறுத்தி தீர்மானம்.

* மீனவர் போராட்டத்திற்கு ஆதரவு மற்றும் அவர்களின் பிரச்சினைகளுக்கு நிரந்தரத் தீர்வு கொண்டு வர வேண்டும் என வலியுறுத்தி தீர்மானம்.

* லோக்சபா தொகுதி மறுசீரமைப்பு தேவையில்லை என தீர்மானம்.

* பன்னாட்டு அரங்கிற்குத் ஈ.வெ.ரா., பெயர் வைக்க வலியுறுத்தி தீர்மானம்.

* கொள்கைத் தலைவர்களின் வழியில் பயணிப்போம் என தீர்மானம்.

* மாநில அரசுகளுக்கு அதிகாரங்கள் பகிர்ந்தளிக்கப்பட வேண்டும் என வலியுறுத்தி தீர்மானம்.

* அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் மற்றும் பணியாளர்களை நம்ப வைத்து ஏமாற்ற வேண்டாம் என தீர்மானம்

* சட்டம் ஒழுங்கு சீர்கேட்டுக்குக் காரணமான தி.மு.க. அரசுக்குக் கண்டனம் தெரிவித்து தீர்மானம்.

* பாலியல் வன்கொடுமை வழக்குகளை விசாரிக்க, சிறப்பு விரைவு நீதிமன்றங்கள் அமைக்க வேண்டும் என தீர்மானம்.

* இலங்கைத் தமிழர் பிரச்னைக்குப் பொது வாக்கெடுப்பு நடத்த வேண்டும் என தீர்மானம்.

* தேர்தல் கூட்டணி நிலைப்பாடு குறித்து முடிவு எடுக்க தலைவர் விஜய்க்கே முழு அதிகாரம் என தீர்மானம்

* புதிய நிர்வாகிகளுக்கு வாழ்த்துகளும், பாராட்டுகளும் தெரிவித்து தீர்மானம்.

* கட்சிகாக உழைத்து மரணமடைந்த தொண்டர்களுக்கு இரங்கல் தெரிவித்து தீர்மானம்.

கூட்டத்தில், கட்சியின் முன்னணி நிர்வாகிகள் ஆனந்த், வெங்கட்ராமன் உள்ளிட்டோர் பேசினர்.

உங்களுக்கு ஓய்வு தருவது தான் எங்கள் வேலை!

த.வெ.க., பொதுக்குழு கூட்டத்தில் தேர்தல் பிரிவு மேலாண்மை பொதுச்செயலாளர் ஆதவ் அர்ஜூனா பேசியதாவது: விஜய் இனி தளபதி அல்ல; வெற்றி தலைவர். எம்.ஜி.ஆர்., பெயரில் உள்ள இந்த அரங்கில் இருந்து முதல் கூட்டம் உதயமாகி உள்ளது. உட்கட்டமைப்போடு தேர்தல் போருக்கு தயார் ஆகி கொண்டு இருக்கிறோம்.

நீங்க சொல்கிற மாதிரி ஓர்க் அட் ஹோம் அல்ல. உங்களுக்கு எல்லாம் ஓய்வு கொடுக்க தான் தயாராகி கொண்டு இருக்கிறோம். உங்களுடைய 70 வருட அரசியல், ஒட்டுமொத்த மன்னர் ஆட்சி, குடும்ப ஆட்சிக்கு முடிவு கட்ட வந்து இருக்கிறோம். இந்த ஊழல் அரசியல் அமைச்சர்களையும், ஊழல் குடும்பத்தையும் தூக்கி எறிவதற்காக கட்சியின் உட்கட்டமைப்பை உருவாக்கி கொண்டு இருக்கிறார் விஜய்.நம்முடைய ஒரே அரசியல் எதிரி தி.மு.க., ஊழல், குடும்ப ஆட்சி. அதோடு கொள்கை எதிரி பா.ஜ., பிரசாந்த் கிஷோர் வருகையை தொடர்ந்து தி.மு.க., பொய் பிரசாரம் செய்ய துவங்கியது.

தி.மு.க., ஒரு பெரிய நிறுவனத்தை நடத்தி கொண்டு இருக்கிறது. எழுதி வைத்து கொள்ளுங்கள், நாங்க ஒன்னும் ஊழல் பண்ணவில்லை. 10 வருடம் ஆட்சியில் இல்லை. விஜய் ஆண்டுக்கு ரூ.ஆயிரம் கோடி சம்பாதிப்பதை விட்டுவிட்டு வந்திருக்கிறார். சட்டசபையில் தி.மு.க., கூட்டணி எம்.எல்.ஏ.,க்கள் வேல்முருகன் பேசினால் கூட காட்டுவதில்லை.

கள்ளக்குறிச்சியில் 70 பேர் இறந்த போதும் முதல் ஸ்டாலின் ஏன் அங்கு செல்லவில்லை. மத்திய அரசை எதிர்ப்பது போல் தி.மு.க., நாடகமாடுகிறது. போலீசார் தவறு செய்யவில்லை. போலீசாரை இயக்கும் அதிகாரங்கள் தவறு செய்கிறது.

த.வெ.க.,வில் ஜாதி அரசியல் கிடையாது. தி.மு.க., தான் ஜாதியை வைத்து அரசியல் செய்கிறது. வரும் நாட்களில் விஜய் மக்களை நேரடியாக சந்திப்பார். இளைஞர்கள் கூட்டம் 2026ல் ஆட்சியாளர்களை முடிவு செய்வார்கள்.இவ்வாறு ஆதவ் அர்ஜூனா பேசினார்.

பொதுக்குழு கூட்டத்தில் 2 ஆயிரம் நிர்வாகிகள் பங்கேற்றுள்ளனர். கூட்டத்தில் பங்கேற்கும் அனைவருக்கும் காலை மற்றும் மதிய உணவு வழங்கப்பட இருக்கிறது.

ஏழு மணிக்கே வந்த விஜய்

கூட்டம் நடக்கும் இடத்திற்கு காலை 7:00 மணிக்கே விஜய் வந்துவிட்டார். கூட்டம் ஏற்பாடுகள், நிர்வாகிகளுக்கான உணவு ஏற்பாடுகளை மேற்பார்வையிட்டார். சமீபத்தில் நடந்த கட்சி ஆண்டு விழாவில், உணவு வழங்குவதில் குளறுபடிகள் நடந்தன.

அமர்ந்து சாப்பிட வழியின்றி நின்று கொண்டே நிர்வாகிகள் சாப்பிட்ட படங்கள், வீடியோ வெளியானது. இந்த முறை அத்தகைய குளறுபடிகள் நடக்கக்கூடாது என்று ஏற்பாடுகளை கவனிக்கும் நிர்வாகிகளுக்கு விஜய் அறிவுறுத்தி உள்ளார்.

பொதுக்குழுவில் விஜயின் பெற்றோர் சந்திரசேகரன், ஷோபா ஆகியோரும் பங்கேற்றுள்ளனர்.






      Dinamalar
      Follow us