sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, பிப்ரவரி 15, 2026 ,மாசி 3, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

தமிழகம்

/

லாரி புக்கிங் ஏஜன்டுகளும் 18ம் தேதி முதல் ஸ்டிரைக்

/

லாரி புக்கிங் ஏஜன்டுகளும் 18ம் தேதி முதல் ஸ்டிரைக்

லாரி புக்கிங் ஏஜன்டுகளும் 18ம் தேதி முதல் ஸ்டிரைக்

லாரி புக்கிங் ஏஜன்டுகளும் 18ம் தேதி முதல் ஸ்டிரைக்


ADDED : ஆக 13, 2011 01:10 AM

Google News

ADDED : ஆக 13, 2011 01:10 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சேலம் : டீசல் விலை, சுங்க வரி போன்றவற்றை குறைக்கக்கோரி, லாரி புக்கிங் ஏஜன்டுகள் சம்மேளனத்தினர், வரும் 18ம் தேதி முதல் காலவரையற்ற வேலை நிறுத்தத்தில் பங்கேற்கின்றனர்.

சேலத்தில், நேற்று நடந்த, தமிழ்நாடு லாரி புக்கிங் ஏஜன்டுகள் சம்மேளனத்தின் கூட்டத்தில், சம்மேளனத் தலைவர் ராஜவடிவேல் கூறியதாவது: ஓராண்டில், பலமுறை தொடர்ந்து டீசல் விலையும், சுங்க வரி, இன்சூரன்ஸ் மற்றும் லாரி டயர்களின் விலையும் தாறுமாறாக உயர்ந்துள்ளன. இவற்றைக் குறைக்க வலியுறுத்தி, கடந்தாண்டு அகில இந்திய லாரிகள், வேலை நிறுத்தம் அறிவிக்கப்பட்டது. மத்திய அரசு, நிர்வாகிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தியதில், உடன்படிக்கை ஏற்பட்டது. ஆனால், இதுவரை அமல்படுத்தவில்லை.



இது தொடர்பாக சேலத்தில், கடந்த 29ம் தேதி, தென் மாநில மோட்டார் டிரான்ஸ்போர்ட் அசோசியேஷன் கூட்டத்தில், வரும் 18ம் தேதி முதல் லாரிகள் இயக்கப்படாமல், வேலை நிறுத்தப் போராட்டத்தில் பங்கேற்பதாக முடிவு செய்யப்பட்டது. இந்தப் போராட்டத்துக்கு, லாரி புக்கிங் ஏஜன்டுகள் சம்மேளனமும், ஆதரவு தெரிவித்துள்ளது. தமிழகம் முழுவதும், 6,700 லாரி புக்கிங் ஏஜன்டுகள் உள்ளனர். அனைவரும் வேலை நிறுத்தத்தில் ஈடுபட உள்ளனர். வட மாநிலங்களுக்கு, வரும் 14ம் தேதி முதல், லோடுகள் புக்கிங் செய்வது நிறுத்தப்படும். இவ்வாறு, அவர் கூறினார்.








      Dinamalar
      Follow us