பெருமாள் கோவில்களில் சொர்க்க வாசல் திறப்பு; புகைப்படம் ஆல்பம் இதோ!
பெருமாள் கோவில்களில் சொர்க்க வாசல் திறப்பு; புகைப்படம் ஆல்பம் இதோ!
UPDATED : ஜன 10, 2025 11:32 AM
ADDED : ஜன 10, 2025 06:36 AM

சென்னை: வைகுண்ட ஏகாதசியின் முக்கிய நிகழ்வான சொர்க்கவாசல் திறப்பு நிகழ்ச்சி, பெருமாள் கோவில்களில் இன்று (ஜன.,10) நடைபெற்றது. ரங்கா.. ரங்கா.. கோஷத்துடன் லட்சக்கணக்கான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.
ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோவிலில் காலை 5.15 மணிக்கு சொர்க்கவாசல் திறக்கப்பட்டது.

சேலம் காருவள்ளி பிரசன்ன வெங்கட்ரமண சுவாமி சொர்க்கவாசல் வழியாக எழுந்தருளி பக்தர்களுக்கு அருள் பாலித்தார்.

கரூர் அபயப்பிரதான ரங்கநாதர் சுவாமி, பக்தர்களுக்கு சிறப்பு அலங்காரத்தில் அருள்பாலித்தார்.

சொர்க்கவாசல் திறப்பை முன்னிட்டு, கோவை பாப்பநாயக்கன்பாளையம் சீனிவாச பெருமாளை ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.

நாமக்கல் அரங்கநாதர் கோவிலில், ஏராளமான பக்தர்கள் முன்னிலையில் சொர்க்கவாசல் திறக்கப்பட்டது. சொர்க்கவாசல் வழியாக சுவாமி சடாரியை பட்டாச்சாரியார்கள் எடுத்து வந்தனர்.

அரியக்குடி திருவேங்கடமுடையான் கோவில் சொர்க்கவாசல் திறப்பு நிகழ்ச்சியில் பக்தர்கள் ரங்கா...ரங்கா என கோஷத்துடன் சுவாமி தரிசனம் செய்தனர்.
சேலம் கோட்டை அழகிரிநாதர், சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.

பொள்ளாச்சி கரிவரதராஜ பெருமாள் கோவிலில் சொர்க்கவாசல் திறப்பு நிகழ்ச்சி நடைபெற்றது.

மதுரை கள்ளழகர் திருக்கோவிலில் வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு சொர்க்க வாசல் திறக்கப்பட்டது.

வைகுண்ட ஏகாதசி முன்னிட்டு, காரமடை அரங்கநாதர் கோவிலில் சொர்க்கவாசல் திறக்கப்பட்டது.

கன்னியாகுமரி திருமலை திருப்பதி வெங்கடாசலபதி கோவிலில் சொர்க்கவாசல் திறக்கப்பட்டது.

மயிலாடுதுறை மாவட்டம், சீர்காழி தாடாளன் பெருமாள் கோவிலில் சொர்க்கவாசல் திறக்கப்பட்டது. கோவிந்தா, கோவிந்தா என முழக்கமிட்டு பக்தர்கள் தரிசனம் செய்தனர் .

திருப்பதியில் வைகுண்ட ஏகாதசி முன்னிட்டு கண்கவர் மலர் அலங்காரம் செய்யப்பட்டிருந்தது.

வைகுண்ட ஏகாதசி முன்னிட்டு ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவிலில் சொர்க்கவாசல் திறக்கப்பட்டது. ஆண்டாள், ரங்கமன்னார் எழுந்தருளினர்.

சிவகங்கை மாவட்டம் மானாமதுரை வீர அழகர் கோயிலில் சுந்தரராஜ பெருமாள் ஸ்ரீதேவி பூதேவியுடன் வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு பரமபத வாசல் வழியாக வந்து பக்தர்களுக்கு காட்சியளித்தார்.

சேலம் மாவட்டம், ஆத்தூர், கோட்டை பிரசன்ன வெங்கடேச பெருமாள் கோவிலில், பிரசன்ன வெங்கடேச பெருமாள் சொர்க்கவாசல் வழியாக எழுந்தருளினார்.
![]() |


