sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

தமிழகம்

/

பட்டாசு விபத்தில் உயிரிழப்போர் குழந்தைகள் படிப்பு செலவை அரசே ஏற்கும்!: முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு

/

பட்டாசு விபத்தில் உயிரிழப்போர் குழந்தைகள் படிப்பு செலவை அரசே ஏற்கும்!: முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு

பட்டாசு விபத்தில் உயிரிழப்போர் குழந்தைகள் படிப்பு செலவை அரசே ஏற்கும்!: முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு

பட்டாசு விபத்தில் உயிரிழப்போர் குழந்தைகள் படிப்பு செலவை அரசே ஏற்கும்!: முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு

20


UPDATED : நவ 11, 2024 12:20 AM

ADDED : நவ 10, 2024 11:55 PM

Google News

UPDATED : நவ 11, 2024 12:20 AM ADDED : நவ 10, 2024 11:55 PM

20


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

விருதுநகர்: ''பட்டாசு விபத்துகளில் இறக்கும், தொழிலாளர் குழந்தைகளின் உயர்கல்வி செலவை அரசே ஏற்கும்,'' என, விருதுநகரில் நடந்த நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவில் முதல்வர் ஸ்டாலின் அறிவித்தார்.

விருதுநகரில், 77.12 கோடி ரூபாயில் கட்டப்பட்ட புதிய கலெக்டர் அலுவலகத்தை முதல்வர் ஸ்டாலின் நேற்று திறந்து வைத்தார்; கலெக்டர் ஜெயசீலனை இருக்கையில் அமர வைத்து புகைப்படம் எடுத்தார்.



பின், பட்டம்புதுாரில் நடந்த அரசு விழாவில், 417 கோடியே 21 லட்சத்திற்கான நலத்திட்ட உதவிகளை, 57,556 பயனாளிகளுக்கு வழங்கிய முதல்வர் ஸ்டாலின் பேசியதாவது:

விருதுநகர் மாவட்டத்தில், 1,256 ஊரக குடியிருப்புகளுக்கு, தாமிரபரணி குடிநீர் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

ஆயத்த ஆடை பூங்கா


இருக்கன்குடி மாரிஅம்மன் கோவில் திருப்பணிகள், ஒருங்கிணைந்த ஆயத்த ஆடைகள் பூங்கா உள்ளிட்ட பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்படுகின்றன. மாவட்டத்தில், 95 சதவீதம் பிளஸ் 2 மாணவர்கள் உயர்கல்வியில் சேர்க்கப்பட்டு உள்ளனர்.

புதுமைப்பெண், நான் முதல்வன், தமிழ் புதல்வன், கல்லுாரி கனவு திட்டத்தால் அதிகளவு மாணவர்கள் உயர்கல்விக்கு சேர்ந்துள்ளனர். இதற்காக விருதுநகர் கலெக்டர் ஜெயசீலனுக்கு நல் ஆளுமை விருது வழங்கி உள்ளேன்.

பட்டாசு விபத்துகளில் இறக்கும் தொழிலாளர் குழந்தைகளின் உயர்கல்வி செலவை அரசே ஏற்கும். மாவட்ட அளவிலேயே முடிவு செய்து கலெக்டர் வழங்கக்கூடிய வகையில், இதற்கான தனி நிதியம் உருவாக்கப்படும். அதற்காக, 5 கோடி ரூபாய் ஒதுக்கப்படும்.

போராடுவேன்


நாளிதழ் ஒன்றின், 'டாப் 10' சக்தி வாய்ந்த தலைவர்கள் பட்டியலில், என் பெயர் இடம் பெற்றது. இது, மக்களாகிய உங்களால் தான். தமிழகத்தை உயர்த்த, எல்லா புள்ளி விபரங்களிலும் வளர்ச்சி எதிரொலித்து கொண்டிருக்கிறது.

தமிழகத்தை உயர்த்த, என் சக்தியை மீறியும் உழைப்பேன்; போராடுவேன். நம்மை முந்தி வெற்றி பெற வேண்டும் என, பலர் வந்து கொண்டிருக்கின்றனர். எனவே, இன்னும் வேகமாக ஓட நினைக்கிறேன்.

மக்களுக்கு பயனில்லாத திட்டங்களை கொண்டு வந்தேன் என, எதிர்க்கட்சி தலைவர் பழனிசாமி உளறுகிறார். எனக்கு சிரிப்பு தான் வருகிறது. எதை பயனில்லாத திட்டம் என்கிறீர்கள். பழனிசாமி புளுகு மூட்டையை அவிழ்த்து விடுகிறார்.

கிண்டி உயர் சிறப்பு மருத்துவமனை, மதுரையில் நுாற்றாண்டு நுாலகம், 1.70 கோடி பேர் பெறும் மகளிர் உரிமை தொகை போன்றவற்றை பயனில்லாத திட்டங்கள் என்று கூறுகிறீர்களா? திட்டங்களுக்கு கருணாநிதி பெயரை வைக்காமல், பதவிக்காக கரப்பான் பூச்சி போல ஊர்ந்து சென்ற உங்கள் பெயரையா வைக்க முடியும்.

புறக்கணிப்பர்


வாய்த்துடுக்கு, ஆணவத்தில் பேசி, பேசித்தான் தொடர் தோல்வியை சந்தித்து வருகிறீர்கள். உங்கள் ஆணவ பேச்சால், மக்கள் உங்களை தொடர்ந்து புறக்கணிப்பர்.

கருணாநிதி பெயரால் தமிழகத்தை வாழ வைக்கக் கூடிய திட்டங்களை செயல்படுத்தியதில் நான் பெருமைப்படுகிறேன். அத்திட்டங்களின் வெளிச்சத்தால் எதிர்க்கட்சி தலைவருக்கு கண் கூசுகிறது. என் பணிகள் தொடரும்.

இவ்வாறு முதல்வர் பேசினார்.

விழாவில், அமைச்சர்கள் சாத்துார் ராமச்சந்திரன், எ.வ.வேலு, தங்கம் தென்னரசு, கணேசன், எம்.பி.,க்கள் நவாஸ்கனி, மாணிக்கம் தாகூர், தலைமை செயலர் முருகானந்தம், எம்.எல்.ஏ.,க்கள் சீனிவாசன், தங்கபாண்டியன், ரகுராமன். மேலும், வருவாய் நிர்வாக ஆணையர் ராஜேஷ் லக்கானி, வருவாய் துறை முதன்மை செயலர் அமுதா உள்ளிட்டோர் பங்கேற்றனர்.






      Dinamalar
      Follow us