தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/தமிழகம்/ போட்டி அரசாங்கம் நடத்துகிறார் கவர்னர்

 போட்டி அரசாங்கம் நடத்துகிறார் கவர்னர்

 போட்டி அரசாங்கம் நடத்துகிறார் கவர்னர்

2


ADDED : ஜூலை 06, 2026 07:28 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜூலை 06, 2026 07:28 AM

2


2
Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

லோக்பவனில் நடந்த நிகழ்ச்சியில் பேசிய கவர்னர் அர்லேக்கர், 'மக்கள் தங்கள் பிரச்னைகளுக்கு தீர்வு காண, லோக் பவனை அணுகலாம். சமூகத்தில் நிலவும் ஏற்றத் தாழ்வுகளை சரி செய்ய முயல்வோர், எந்த உதவி வேண்டுமானாலும் கேட்டு முறையிடலாம்' என குறிப்பிட்டுள்ளார்.
அவரது பேச்சு, மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஆட்சிக்கு எதிராக, ஒரு போட்டி அரசாங்கம் நடத்தும் பகிரங்க அறிவிப்பாக உள்ளது. கவர்னரின் இந்த செயல், மாநில அரசின் நிர்வாகத்தில் நேரடியாக தலையிடும் அதிகார அத்துமீறல்.
கவர்னரின் அதிகார அத்துமீறலை தடுத்து நிறுத்த, தமிழக அரசும், முதல்வரும் உடனடியாக சட்ட நடவடிக்கைகளையும், அரசியல் ரீதியான நடவடிக்கைகளையும் மேற்கொள்ள வேண்டும்.
அரசியலமைப்பு சட்டம் கவர்னருக்கு வழங்கியுள்ள அதிகார எல்லையையும், உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்புகளையும் மதிக்காத கவர்னர் அர்லேக்கரின் அத்துமீறலை, ஜனாதிபதி தலையிட்டு தடுத்து நிறுத்த வேண்டும்.

- வீரபாண்டியன்,
மாநில செயலர், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி




தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us