ADDED : ஜன 09, 2024 04:59 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சென்னை:பல்கலை துணைவேந்தர்களை நியமிப்பதற்காக, தான் அமைத்த தேடுதல் குழுவை கவர்னர் ரவி திரும்ப பெற்றார்.
சென்னை, பாரதியார் மற்றும் ஆசிரியர் கல்வியியல் பல்கலைக்கழகங்களுக்கு துணைவேந்தர்களை நியமிக்க தேடுதல் குழு நியமிப்பதில், கவர்னர் மற்றும் தமிழக அரசு இடையே மோதல் ஏற்பட்டது.
இந்நிலையில், கவர்னர் மாளிகை வெளியிட்ட அறிக்கையில், உச்சநீதிமன்றம், உயர்நீதிமன்ற தீர்ப்புகள் அடிப்படையில், தேடுதல் குழு திரும்ப பெறப்படுகிறது. பல்கலை மானிய குழு உறுப்பினருடன் தேடுதல் குழுவை தமிழக அரசு அமைக்கும் என நம்புகிறோம். மாணவர் நலன் பாதிக்காத வகையில் தமிழக அரசின் நடவடிக்கை தேவை. இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டு உள்ளது.