UPDATED : மார் 03, 2025 01:31 PM
ADDED : மார் 03, 2025 01:21 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கோவை: கோவை பட்டணம் புதூரில் மனைவி சங்கீதாவை (வயது 47) சுட்டுக்கொன்ற கணவன் கிருஷ்ணகுமார், கேரளா சென்று தற்கொலை செய்து கொண்ட சம்பவம் நடந்துள்ளது.
கோவை மாவட்டம் சூலூர் அடுத்த பட்டணம்புத்தூரில் மனைவியை துப்பாக்கியால் சுட்டு கொன்றுவிட்டு கணவன் கிருஷ்ணகுமார் வயது (50) பாலக்காடுவிற்கு சென்றுள்ளார். அங்கு அவர் தன்னைத் தானே சுட்டுக்கொன்று தற்கொலை செய்து கொண்டார்.
இது குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். நடத்தையில் சந்தேகமடைந்து மனைவியை கணவன் சுட்டு கொன்று விட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார் என முதற்கட்ட விசாரணையில் தெரியவந்தது.