ADDED : ஜன 29, 2024 12:00 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருநெல்வேலி : தென்காசி மாவட்டம் கடையநல்லூர் அருகே சொக்கம்பட்டியை சேர்ந்தவர்கள் திருச்செந்தூருக்கு சங்கரன்கோவில் -- - திருநெல்வேலி சாலையில் பாதயாத்திரை சென்றனர்.
ஜன. 26 இரவில் திருநெல்வேலி மானூர் அருகே வந்தபோது டூ வீலரில் வேகமாக வந்த 16 வயது சிறுவன் டென்சிங், பக்தர்கள் மீது மோதினார். இதில் பக்தர்கள் மூவர் காயமுற்றனர். பலத்த காயமுற்ற கார்த்திக் 25, இறந்தார். திருநெல்வேலி அரசு மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்த சிறுவன் டென்சிங் நேற்று இறந்தார்.