ADDED : அக் 06, 2024 05:51 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சென்னை: தமிழக அரசின் பதிவுத்துறை சார்பில், இணையதளம் வழியாக முத்திரை தீர்வை மற்றும் பதிவு கட்டணம் செலுத்துதல், பதிவு செய்த பின் உடனே பத்திரங்களை திரும்ப வழங்குதல், பதிவு செய்த பின் உட்பிரிவு இல்லாத சமயங்களில் உடனே பட்டா மாறுதல் செய்தல் உள்ளிட்ட திட்டங்கள் செயல்படுத்தப்படுகின்றன.
கர்நாடக மாநில பதிவுத்துறை அதிகாரிகள் அடங்கிய குழு, உதவி பதிவுத்துறை தலைவர் தலைமையில் நேற்று சென்னை வந்தது.
இக்குழு, சென்னை சாந்தோமில் உள்ள பதிவுத் துறை அலுவலகத்தில், அதன் தலைவர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவரை சந்தித்து, தமிழகத்தில் செயல்படுத்தப்படும் திட்டங்களை கேட்டறிந்தனர்.
இதேபோல கடந்த மாதம், தெலுங்கானா மாநில அதிகாரிகள் சென்னை வந்து, தமிழகத்தில் செயல்படுத்தும் திட்டங்களை கேட்டறிந்தனர்.