ADDED : செப் 15, 2025 02:57 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சென்னை: பெற்றோர் இருவரையும் இழந்த அல்லது ஒருவரை இழந்து, மற்றொருவரால் பராமரிக்க இயலாத குழந்தைகளை அரவணைத்து, தொடர்ந்து பாதுகாத்திட, 'அன்புக்கரங்கள்' திட்டம், தமிழக அரசால் அறிவிக்கப்பட்டது.
இத்திட்டத்தில், அக்குழந்தைகளின் 18 வயது வரையிலான பள்ளி படிப்பு முடியும் வரை, இடைநிற்றல் இல்லாமல் கல்வியை தொடர, மாதம் 2,000 ரூபாய் உதவித்தொகை வழங்கப்படும்.
பள்ளிப்படிப்பு முடித்த பின், கல்லுாரி கல்வி மற்றும் உரிய திறன் மேம்பாட்டு பயிற்சிகளும், அவர்களுக்கு வழங்க வழிவகை செய்யப்படும்.
இத்திட்டத்தை, சென்னை கலைவாணர் அரங்கில் இன்று நடக்கும் விழாவில் முதல்வர் ஸ்டாலின் துவக்கி வைக்கிறார்.

