ADDED : செப் 22, 2024 03:46 AM
ஹோஷியார்பூர்:பஞ்சாபில், போலீஸ்காரரை தாக்கியவர் கைது செய்யப்பட்டார். மேலும் இருவரை போலீசார் தேடுகின்றனர்.
ஹிமாச்சல பிரதேசத்தில்இருந்து ஒரே பைக்கில் மூன்று பேர் நேற்று முன்தினம் வந்தனர். பஞ்சாப் மாநிலம் ஹோஷியார்பூர் சக் சாது சோதனைச்சாவடியில், அந்த பைக்கை போலீசார் நிறுத்தினர்.
போக்குவரத்து விதிமுறையை மீறி, ஒரே பைக்கில் மூவர் வந்தது குறித்து விசாரித்தனர். அப்போது, உதவி சப்- - இன்ஸ்பெக்டர் ராகேஷ் குமாருடன் வாக்குவாதம் செய்த மூவரும், அவரை சரமாரியாகத் தாக்கினர்.
அவரது சீருடையைக்கிழித்து, துப்பாக்கியை பிடுங்க முயற்சித்தனர். தகவல் அறிந்து போலீசார் விரைந்து சென்றனர். போலீசைக் கண்டதும் மூவரும் ஓடினர். விரட்டிச் சென்று, சுக்பீர் என்பவரை போலீசார் பிடித்து விட்டனர்.
தப்பி ஓடிய அமர்ஜித்மற்றும் ஜிண்டி ஆகியோரை போலீசார் தேடுகின்றனர். காயம் அடைந்த உதவி எஸ்.ஐ., ராகேஷ் குமார், மருத்துவமனையில் சிகிச்சை பெற்றார்.