ADDED : ஜூன் 03, 2025 03:15 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
செங்கல்பட்டு மாவட்டம் மூவரசம்பட்டு அரசு மேல்நிலைப்பள்ளி நிகழ்ச்சியில், அமைச்சர் அன்பரசன், தாமதமாக கலந்து கொண்டதோடு, மின்தடையால், மாணவ - மாணவியரை ஒரு மணி நேரம் காத்திருக்க வைத்தார்.
அதுமட்டுமல்லாமல், தேசியக்கொடியை தலைகீழாக ஏற்றியது கூடத் தெரியாமல் அவமரியாதை செய்திருக்கிறார். அமைச்சர் அன்பரசனுக்கு, 'தமிழில் பிழையின்றி எழுதத் தெரியாது' என்பது, ஏற்கனவே ஒரு பள்ளி நிகழ்ச்சியில் தெரிந்தது.
தற்போது, தேசியக்கொடி குறித்தும் அவருக்கு எதுவும் தெரியாது என தெரியவந்துள்ளது. எனவே, கல்வி தொடர்பான நிகழ்ச்சிகளை, அவர் தவிர்ப்பது, நமது மாணவச் செல்வங்களுக்கு செய்யும் பேருதவியாக அமையும்.
அண்ணாமலை
தமிழக பா.ஜ., முன்னாள் தலைவர்