உள்ளடக்கத்திற்கு செல்ல

வெறும் காகிதத்தில் மட்டுமே போதைப்பொருள் தடுப்பு படை
வெறும் காகிதத்தில் மட்டுமே போதைப்பொருள் தடுப்பு படை
ADDED : ஜூலை 07, 2026 05:01 AM

அ நிறம் | அளவு
திருச்சி மாவட்டம் உறையூர் பகுதியில், பள்ளி மாணவர்கள் பட்டப்பகலில் போதைப்பொருள் பயன்படுத்துவது போன்ற, 'வீடியோ' வெளியாகியுள்ளது. அந்தக் காட்சிகள், தமிழகத்தில் போதைப்பொருட்களின் நடமாட்டம், எந்த அளவுக்கு வேரூன்றி உள்ளது என்பதை, வெளிச்சம் போட்டு காட்டுகின்றன.
எவ்வித தடையுமின்றி, சுலபமாகவும், சுதந்திரமாகவும், தமிழகத்தின் அனைத்து பகுதிகளிலும், சர்வ சாதாரணமாக கஞ்சா உள்ளிட்ட போதைப்பொருட்கள் விற்பனையாவதை பார்க்கும் போது, இவற்றை தடுப்பதற்காக தமிழக அரசு அறிவித்தது போதைப்பொருள் தடுப்பு படையா அல்லது போதைப்பொருளை தடுக்க முடியாத படையா என்ற கேள்வி எழுகிறது.
எனவே, கஞ்சா உள்ளிட்ட போதைப்பொருட்கள் நடமாட்டத்தை அடியோடு ஒழிப்பதற்கான நடவடிக்கைகளை தீவிரப்படுத்துவதோடு, அறிவித்த நாள் முதல் வெறும் காகிதத்தில் மட்டுமே இருக்கும் போதைப்பொருள் தடுப்பு படையை, முழு செயல்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும்.
- தினகரன் பொதுச்செயலர், அ.ம.மு.க.,
