'குவான்டம் கம்ப்யூட்டிங்' தொழில்நுட்பத்தின் அவசியம்
'குவான்டம் கம்ப்யூட்டிங்' தொழில்நுட்பத்தின் அவசியம்
ADDED : மார் 29, 2026 02:48 AM

ராஜலட்சுமி தொழில்நுட்பக் கல்வி நிறுவனத்தின் முதல்வர் மகேஷ்வரி பேசியதாவது:
பிளஸ் 2 முடித்த மாணவ - மாணவியருக்கு, கல்லுாரிகள் திறக்க, இன்னும் பல மாதங்கள் உள்ளன. அதுவரை ஓய்வெடுக்கலாம் என, மாணவர்கள் நினைக்கலாம். சில வாரங்கள் வேண்டுமென்றால் ஓய்வெடுங்கள்; அதன் பின், தொழில்நுட்பங்கள் குறித்து கற்றுக்கொள்ள துவங்க வேண்டும்.
என்னுடைய தலைமுறையில், தொழில்நுட்பம் என்றால், அது செயற்கை நுண்ணறிவு. உங்களுடைய தலைமுறையில், தொழில்நுட்பம் என்றால், செயற்கை நுண்ணறிவுடன் கூடிய குவான்டம் கம்ப்யூட்டிங்தான்.
செயற்கை நுண்ணறிவு, தற்போது உலகை ஆள்கிறது. அதற்கு கம்ப்யூட்டர் தொழில்நுட்ப வசதியே காரணம். மாணவர்கள் எந்த ஒரு தொழில் நுட்பமாக இருந்தாலும், அதில், 'குவான்டம் கம்ப்யூட்டிங்' தொழில்நுட்பத்தை ஒருங்கிணைத்து கற்க வேண்டும்.
பிரதமர் மோடி, மத்திய பட்ஜெட்டில், குவான்டம் தொழில்நுட்ப வளர்ச்சிக்காக, நிதி ஒதுக்கீடு செய்துள்ளார்.
அதிலிருந்தே, குவான்டம் கம்ப்யூட்டிங் தொழில்நுட்பத்தின் முக்கியத்துவம் குறித்து, மாணவர்கள் அறிந்து கொள்ள வேண்டும். மாணவர்கள் ஒவ்வொருவரும், ஒரு இலக்கை நிர்ணயம் செய்ய வேண்டும்.
அந்த இலக்கை நோக்கி, ஓடிக்கொண்டே இருக்க வேண்டும். ராஜலட்சுமி தொழில்நுட்பக் கல்வி நிறுவனத்தில், குவான்டம் கம்ப்யூட்டிங் தொழில்நுட்பம் குறித்து, மாணவ - மாணவியருக்கு கற்று கொடுக்கப்படுகிறது.
இவ்வாறு அவர் பேசினார்.

