sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், டிசம்பர் 01, 2025 ,கார்த்திகை 15, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

தமிழகம்

/

அரசின் கவனக்குறைவு தான் காரணம்; வி.சி.க., அடுக்கடுக்கான குற்றச்சாட்டு

/

அரசின் கவனக்குறைவு தான் காரணம்; வி.சி.க., அடுக்கடுக்கான குற்றச்சாட்டு

அரசின் கவனக்குறைவு தான் காரணம்; வி.சி.க., அடுக்கடுக்கான குற்றச்சாட்டு

அரசின் கவனக்குறைவு தான் காரணம்; வி.சி.க., அடுக்கடுக்கான குற்றச்சாட்டு

64


UPDATED : அக் 07, 2024 02:38 PM

ADDED : அக் 07, 2024 07:41 AM

Google News

UPDATED : அக் 07, 2024 02:38 PM ADDED : அக் 07, 2024 07:41 AM

64


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சென்னை: 'அரசின் கவனக்குறைவால் வான் படை சாகச நிகழ்வு சாதனை நிகழ்வாக மாறாமல் வேதனை நிகழ்வாக மாறிவிட்டது' என விடுதலை சிறுத்தைகள் கட்சி துணை பொதுச்செயலர் ஆதவ் அர்ஜுனா குற்றம் சாட்டியுள்ளார்.

அவர் சமூகவலைதளத்தில் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது: மெரினா கடற்கரையில் இந்திய விமானப்படையின் வான்படை சாகச கண்காட்சியை காண மக்கள் கூட்டம் இவ்வளவு வரும் என்று அரசு ஏன் முன்கூட்டியே கவனிக்க தவறியது.

கொளுத்தும் வெயிலில் சுமார் பத்து லட்சத்திற்கும் மேற்பட்ட மக்கள் கூடும் பொழுது அங்கு ஆக்ஸிஜன் பற்றாக்குறை ஏற்படும்.

அதன்காரணமாக உடலில் நீர்சத்து குறைந்து மயக்கம் ஏற்படும். சிலருக்கு மாரடைப்பும் ஏற்படும். இது அறிவியல் எதார்த்தம். இதையெல்லாம் திட்டமிட்டு ஏற்பாடுகளைச் செய்த பிறகே அரசு இந்த நிகழ்விற்கு பொதுமக்களை அனுமதித்திருக்க வேண்டும். கூடிய லட்சக்கணக்கான மக்கள் கூட்டத்திற்கு ஏற்ற வகையில் தேவையான குடிநீர் வசதியை ஏற்படுத்தவில்லை.

பற்றாக்குறை

ஆக்ஸிஜன் பற்றாக்குறையை அகற்ற போதிய இடவசதியை ஒருங்கு படுத்தவில்லை. பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சை அளிக்க முறையான முதல் உதவி சிகிச்சை மையங்களையும் ஏற்பாடு செய்யவில்லை என்றே தெரிகிறது. குறிப்பாக குழந்தைகள், கர்ப்பிணி பெண்கள் கூட்ட நெரிசலில் சிக்கி பாதிப்புக்கு உள்ளானதையும் காண முடிகிறது.

அப்படி பாதிப்புக்கு உள்ளானவர்களை ஆம்புலன்ஸ்கள் மூலம் மருத்துவமனைக்கு அழைத்து செல்லவும் முடியாத நிலையில் போக்குவரத்து நெருக்கடியும் இருந்துள்ளது.

இவ்வளவு மக்கள் திரளும் போது மக்களை ஒழுங்குபடுத்தவும் அவர்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் முன் ஏற்பாடுகளை தமிழக காவல்துறை, சுகாதாரத்துறை, பொதுப்பணித்துறை, போக்குவரத்து துறை உள்ளிட்ட துறையினர் போர்க்கால அடிப்படையில் முன்ஏற்பாடுகளை செய்திருக்க வேண்டும். அதில் போதிய கவனம் செலுத்தாமல் போனதாலேயே இந்த உயிர் இழப்புகளும் நடந்துள்ளது. அரசின் மூத்த நிர்வாகத்தினர் அனைவரும் வான்படை சாகச நிகழ்வை காணும் ஆர்வத்தில் மட்டுமே இருந்துள்ளனர்.

வேதனை நிகழ்வு

தேவையான அமைச்சர்களையோ, அதிகாரிகளையோ இந்த நிகழ்வுக்கான ஏற்பாடுகளைக் கவனிக்க முடுக்கிவிடவில்லை என்பதை மக்களின் குமுறலில் இருந்தே அறிய முடிகிறது. எந்த அரசு தன்நலன் பேணாது தன் மக்கள் நலனையே பெரிதாக பேணும் அரசோ அந்த அரசே மக்களுக்கான அரசாக விளங்கும். அரசின் கவனக்குறைவால் வான் படை சாகச நிகழ்வு சாதனை நிகழ்வாக மாறாமல் வேதனை நிகழ்வாக மாறிவிட்டது. அரசு இனிவரும் காலங்களிலாவது இது போன்ற நிகழ்வுகளில் விழிப்புடன் இருக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

ரூ.25 லட்சம்

'சென்னையில் சாகச நிகழ்வில் உயிரிழந்தோரின் குடும்பங்களுக்கு ரூ.25 லட்சம் நிவாரணம் வழங்க வேண்டும். தன் கடமையில் இருந்து தவறிவிட்ட தமிழக அரசே உயிரிழப்புகளுக்கு பொறுப்பேற்க வேண்டும்' என பா.ம.க., தலைவர் அன்புமணி வலியுறுத்தி உள்ளார்.

சோகம்!

'வானில் சாகசம், தரையில் சோகம்' என சென்னை மெரினாவில் நடந்த, வான் சாகச நிகழ்ச்சியில் ஏற்பட்ட உயிரிழப்பு குறித்து சிவகங்கை தொகுதி காங்கிரஸ் எம்.பி., கார்த்தி சமூகவலைதளத்தில் பதிவிட்டுள்ளார்.

கவனமா இருங்க!

சமூகவலைதளத்தில், தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் வெளியிட்டுள்ள பதிவில், ' மெரினாவில் ஏற்பட்ட உயிரிழப்பு வேதனையளிக்கிறது. அங்கு அடிப்படை வசதிகள் செய்யவில்லை என்று பொதுமக்கள் வேதனையை வெளிப்படுத்தி உள்ளனர்.

மக்கள் அதிகம் கூடும் இடங்களில் பாதுகாப்பை திறம்படச் செயல்படுத்துவதில், இனி வரும் காலங்களில் கவனம் செலுத்த வேண்டும்' என குறிப்பிட்டுள்ளார்.

நிர்வாக சீர்கேடு!

சமூகவலைதளத்தில், தே.மு.தி.க., கட்சி பொதுச்செயலாளர் பிரேமலதா வெளியிட்டுள்ள பதிவில், ' மெரினாவில் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யாமல் அழைப்பு விடுத்ததை நம்பி மக்களும் வந்துவிட்டனர். இது அரசின் நிர்வாக சீர்கேட்டிற்கான முன்னுதாரணம். தி.மு.க.,வின் பொய்யான வாக்குறுதிகளை நம்பி ஓட்டளித்து அவதிப்பட்டு கொண்டு இருக்கும் மக்கள் தமிழக அரசின் விமான சாகச நிகழ்வை காண வந்தும் ஏமாற்றம் அடைந்திருக்கின்றனர்.

மக்கள் கடும் அவதிக்கு உள்ளாக்கப்பட்டதற்கு தமிழக அரசு பொறுப்பேற்க வேண்டும். தமிழக அரசு இறந்தவர்களின் குடும்பத்திற்கு ரூ.10 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும்' என குறிப்பிட்டுள்ளார்.






      Dinamalar
      Follow us