அதெல்லாம் நாங்க மதிக்கிறதே இல்லை; என்ன பொசுக்குனு இப்படி சொல்லிட்டாரு!
அதெல்லாம் நாங்க மதிக்கிறதே இல்லை; என்ன பொசுக்குனு இப்படி சொல்லிட்டாரு!
UPDATED : டிச 01, 2024 01:26 PM
ADDED : டிச 01, 2024 12:11 PM

சென்னை: எதிர்க்கட்சி தலைவரின் நேற்றைய குற்றச்சாட்டை எப்படி பார்க்கிறீர்கள் என்ற கேள்விக்கு பதிலளித்த முதல்வர் ஸ்டாலின், 'அவர் குற்றச்சாட்டை நாங்கள் மதிக்கிறதே இல்லை' என்றார்.
சென்னை கொளத்தூர் தொகுதியில் மழை பாதிப்புகளை முதல்வர் ஸ்டாலின் ஆய்வு செய்தார். கனமழையால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் நிவாரண பணிகள் குறித்து அதிகாரிகளிடம் ஸ்டாலின் கேட்டறிந்தார். அவர் ஆரம்ப சுகாதார நிலையத்தில் ஆய்வு செய்தார்.
பின்னர் அவர் நிருபர்கள் சந்திப்பில், 'சென்னையில் இன்னும் மழை நிற்க வில்லை. மழை நின்றதும் தண்ணீர் வடிந்துவிடும். விழுப்புரத்தில், மின்சார பிரச்னை உள்ளதால் அமைச்சர், அதிகாரிகளை அனுப்பி வைத்துள்ளோம்'.
வானிலை அறிக்கை படி தான் முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கிறோம். வானிலை அறிக்கை தவறு என்று சொல்ல முடியாது. விழுப்புரம், திண்டிவனத்தில் இவ்வளவு மழை பெய்யும் என்று எதிர்பார்க்கவில்லை. ஓட்டு போட்டவர்களுக்கு மட்டுமல்ல எல்லாருக்கும் அனைத்து வேலைகளும் செய்து கொண்டு இருக்கிறோம் என்றார்.
எதிர்க்கட்சி தலைவரின் நேற்றைய குற்றச்சாட்டை எப்படி பார்க்கிறீர்கள் என்ற கேள்விக்கு பதிலளித்த முதல்வர் ஸ்டாலின், 'அவர் குற்றச்சாட்டை நாங்கள் மதிக்கிறதே இல்லை. கவலைப்படுவதும் இல்லை' என்றார்.