சென்னை மக்கள் தூக்கம் தொலைத்தது அ.தி.மு.க. ஆட்சிக்காலம்: முதல்வர்
சென்னை மக்கள் தூக்கம் தொலைத்தது அ.தி.மு.க. ஆட்சிக்காலம்: முதல்வர்
UPDATED : டிச 01, 2024 04:16 PM
ADDED : டிச 01, 2024 04:06 PM

சென்னை: தூங்கி வழிந்த நிர்வாகத்தால் - மனிதத்தவறுகளால் சென்னை மக்கள் தூக்கம் தொலைத்த இரவுகள் அ.தி.மு.க.,ஆட்சிக்காலம் என முதல்வர் ஸ்டாலின் கூறியுள்ளார்.
பெஞ்சல் புயல் காரணமாக, சென்னையில் நேற்று கனமழை கொட்டித் தீர்த்தது. இதனால், பல இடங்களில் தண்ணீர் தேங்கியது. அங்கு மீட்பு பணிகள் நடந்தன.
இந்நிலையில், அந்த பகுதிகளை பார்வையிட்ட முதல்வர் ஸ்டாலின், அமைச்சர்களுடனும், அதிகாரிகளுடனும் ஆய்வு செய்தார்.
தொடர்ந்து, அவர் வெளியிட்ட அறிக்கையில் கூறியுள்ளதாவது: தூங்கி வழிந்த நிர்வாகத்தால் - மனிதத்தவறுகளால் சென்னை மக்கள் தூக்கம் தொலைத்த இரவுகள் அ.தி.மு.க. ஆட்சிக்காலம்! இயற்கைச் சீற்றத்தை எதிர்கொண்டு, ஓரிரவில் இயல்பு நிலைக்குத் திரும்பிடும் காலம், நமது திராவிட மாடல் ஆட்சிக்காலம்!
இயல்புநிலை திரும்பிய பகுதிகளைப் பார்வையிட்டபோது, மக்களின் அன்பையும் வாழ்த்துகளையும் பெற்றுக் கொண்டு, விழுப்புரம் - திண்டிவனம் மாவட்டங்களில் ஏற்பட்டுள்ள பாதிப்புகளைச் சீர்செய்யக் களத்தில் பணியாற்றும் துணை முதல்வர் உதயநிதி உள்ளிட்ட அமைச்சர்களுடன் ஆய்வில் ஈடுபட்டேன். இவ்வாறு அந்த அறிக்கையில் ஸ்டாலின் கூறியுள்ளார்.