விமான நிலைய ஓடுபாதையில் மின்விளக்கு எரியவில்லை: விசாரணைக்கு மத்திய அரசு உத்தரவு
விமான நிலைய ஓடுபாதையில் மின்விளக்கு எரியவில்லை: விசாரணைக்கு மத்திய அரசு உத்தரவு
UPDATED : பிப் 16, 2025 10:25 PM
ADDED : பிப் 16, 2025 09:55 PM

மதுரை: பெங்களூரில் இருந்து திருவனந்தபுரம் சென்ற இண்டிகோ விமானம், திருவனந்தபுரம் ஓடுபாதையில் நடந்த குளறுபடி காரணமாக மதுரைக்கு திருப்பி விடப்பட்டது.
இண்டிகோ ஏர்பஸ் விமானம் 172 பயணிகளுடன் பெங்களூருவில் இருந்து திருவனந்தபுரத்துக்கு இன்று மாலை சென்றது. இந்த விமானத்தில் மேற்குவங்க கவர்னர் ஆனந்த போஸ் பயணித்தார். விமானம் திருவனந்தபுரம் விமான நிலையத்தில் ஓடுபாதையில் தரையிறங்க முயற்சித்தது. அப்போது ஓடுபாதையில் மின் விளக்குகள் எதுவும் எரியவில்லை.
விமான நிலைய நிர்வாகிகள், குளறுபடியை சரி செய்ய முயற்சித்தும் முடியவில்லை. வேறு வழியில்லாத நிலையில் விமானம் மதுரை விமான நிலையத்திற்கு திருப்பி விடப்பட்டது.
இந்த விமானம் மதுரை விமான நிலையத்தில் பாதுகாப்பாக தரை இறங்கியது. விமான நிலைய ஓடுபாதையில் மின் விளக்குகள் எரியாத விவகாரம் குறித்து சிவில் விமான போக்குவரத்து துறை விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.