ADDED : பிப் 04, 2024 01:24 PM

சென்னை: அரசியல் கட்சி துவங்கியதற்காக வாழ்த்து தெரிவித்த அனைவருக்கும் தமிழக வெற்றி கழக கட்சி தலைவரும், நடிகருமான விஜய் நன்றி தெரிவித்து உள்ளார்.
நடிகர் விஜய் அரசியல் களத்தில் இறங்கி விட்டார். 'தமிழக வெற்றி கழகம்' என்ற பெயரில் தன் கட்சியை தேர்தல் ஆணையத்தில் பதிவு செய்துள்ளார். லோக்சபா தேர்தலில் போட்டியிடப் போவதில்லை; 2026 சட்டசபை தேர்தலில் ஜெயித்து, தமிழகத்தில் ஆட்சி அமைப்பதே இலக்கு என்று விஜய் அறிவித்துள்ளார். விஜய் கட்சி துவங்கியதற்காக அரசியல் தலைவர்கள் வாழ்த்து தெரிவித்து இருந்தனர்.
அரசியல் பயணம்
இந்நிலையில், இன்று(பிப்.,04) விஜய் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: அனைவருக்கும் வணக்கம். தமிழக மக்களின் பேரன்போடு நான் முன்னெடுத்துள்ள அரசியல் பயணத்திற்கு தங்களது வாழ்த்துகளை தெரிவித்த பெருமதிப்புக்குரிய பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள், திரைத்துறை நண்பர்கள், தமிழக தாய்மார்கள், சகோதர, சகோதரிகள், ஊக்கமளிக்கும் ஊடகவியலாளர்கள், 'என் நெஞ்சில் குடியிருக்கும் தோழர்கள்' அனைவருக்கும் நெஞ்சார்ந்த நன்றிகளுடன் பணிவான வணக்கங்கள். இவ்வாறு அந்த அறிக்கையில் விஜய் தெரிவித்து உள்ளார்.