சட்டம் இயற்றும் அதிகாரம் சட்டசபைக்கே சொந்தம்: முதல்வர் ஸ்டாலின்
சட்டம் இயற்றும் அதிகாரம் சட்டசபைக்கே சொந்தம்: முதல்வர் ஸ்டாலின்
ADDED : அக் 16, 2025 06:42 PM

சென்னை: சட்டம் இயற்றும் அதிகாரம் முழுக்க முழுக்க மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர்களைக் கொண்ட சட்டசபைக்கே சொந்தம் என முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
அவரது அறிக்கை: சட்டம் இயற்றும் அதிகாரம் முழுக்க முழுக்க மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர்களைக் கொண்ட சட்டசபைக்கே சொந்தம். தமிழ்நாடு சித்த மருத்துவப் பல்கலைக்கழகச் சட்டமுன்வடிவு தொடர்பாக கவர்னர் அனுப்பியுள்ள செய்தியில் இருக்கும் கருத்துகள் மற்றும் அவையின் மாண்பைக் குறைக்ககூடிய வார்த்தை அடங்கிய பகுதிகளைத் தமிழக சட்டசபை நிராகரித்தது. இவ்வாறு முதல்வர் ஸ்டாலின் கூறியுள்ளார்.
இதற்கிடையே முன்னதாக, இன்று காலை சட்டசபையில் முதல்வர் ஸ்டாலின் பேசுகையில், 'கவர்னர் ரவி அரசு முறையை பின்பற்றாமல் தன் கருத்தை தெரிவித்து வருகிறார். கவர்னரின் செயல் அரசியல் சட்டத்திற்கு முரணானது. சட்ட முன்வடிவில் திருத்தங்களை கூற கவர்னருக்கு அதிகாரம் கிடையாது.
சட்டம் இயற்றுவது என்பது சபைக்கு மட்டுமே அதிகாரம். சித்த மருத்துவ முன்வடிவு நிதிச்சட்ட முன்வடிவு என்பதால் கவர்னரின் பரிந்துரையை பெற வேண்டும்.அரசமைப்பு நடைமுறைபடி செயல்படாத கவர்னர் சட்ட முன்வடிவில் சில கருத்துகளை கூறியுள்ளார். இவ்வாறு முதல்வர் ஸ்டாலின் பேசினார்.