ADDED : செப் 29, 2024 01:30 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பாமாயில் உள்ளிட்ட சமையல் எண்ணெய்களுக்கான இறக்குமதி வரியை உயர்த்த வேண்டும் என விவசாய அமைப்புகள், தென்னை வளர்ச்சி வாரிய உறுப்பினர்கள், தேசிய தென்னை நார் கூட்டமைப்பு உள்ளிட்ட பல்வேறு அமைப்பினர், மத்திய அரசை வலியுறுத்தினர்.
விவசாயிகளின் கோரிக்கையை ஏற்று, பாமாயில் உள்ளிட்ட சமையல் எண்ணெய் இறக்குமதி வரியை, 20 சதவீதத்துக்கு மேலாக மத்திய அரசு உயர்த்தி உள்ளது. இதனால், தேங்காய் விலை உயர்ந்துள்ளது.
தேசிய தென்னை நார் கூட்டமைப்பு தலைவர் கவுதமன் கூறுகையில், ''தேங்காய் விலை, 1 டன், 50,000 ரூபாய்க்கும் அதிகமாக உயர்ந்துள்ளது. மத்திய அரசின் நடவடிக்கையே இதற்கு காரணம்,'' என்றார்.
- நமது நிருபர் -