கொட்டி தீர்த்தது மழை; சென்னையில் ஏரிகளின் நீர்மட்டம் விர்ர்...! இன்றைய நிலவரம் இதோ!
கொட்டி தீர்த்தது மழை; சென்னையில் ஏரிகளின் நீர்மட்டம் விர்ர்...! இன்றைய நிலவரம் இதோ!
UPDATED : டிச 15, 2024 08:29 AM
ADDED : டிச 15, 2024 07:58 AM

சென்னை: கொட்டித்தீர்த்த கனமழை காரணமாக, சென்னைக்கு குடிநீர் வழங்கும் ஏரிகளில் நீர்மட்டம் உயர்ந்தது.
வங்கக்கடலில் உருவாகிய காற்றழுத்த தாழ்வு காரணமாக கனமழை பெய்து வருகிறது. அதனால் சென்னையின் முக்கிய குடிநீர் ஆதாரமாக விளங்கும் ஏரிகளில் நீர்மட்டம் உயர்ந்து உள்ளது. இதோ ஏரிகளின் இன்றைய நீர்மட்டம் நிலவரம்:
* மொத்தம் 35 அடி கொண்ட பூண்டி ஏரிக்கு 8,560 கன அடி நீர் வந்து கொண்ட இருக்கிறது. தற்போது 3,231 மி.கனஅடி நீர் இருப்பு உள்ளது. நீர்மட்டம் 34.95 அடி உள்ளது.
* 21.20 அடி உயரம் கொண்ட புழல் ஏரிக்கு 653 கன அடி நீர் வந்து கொண்டு இருக்கிறது. தற்போது 2,920 மி.கனஅடி நீர் இருப்பு உள்ளது. நீர்மட்டம் 19.72 அடி உள்ளது
* 18.86 அடி கொண்ட சோழவரம் ஏரிக்கு 209 கன அடி நீர் வந்து கொண்டு இருக்கிறது. 321 மி.கன அடி நீர் இருப்பு உள்ளது. நீர்மட்டம் 7.76 அடி உள்ளது.
* 24 அடி கொண்ட செம்பரம்பாக்கம் ஏரிக்கு 2,240 கன அடி நீர் வந்து கொண்டு இருக்கிறது. 3,056 மி.கன அடி நீர் இருப்பு உள்ளது. ஏரியில் இருந்து, 6 ஆயிரம் கன அடி நீர் வெளியேற்றப்படுகிறது. நீர்மட்டம் 22.96 அடி உள்ளது.
* 36.61 அடி கொண்ட தேர்வாய் கண்டிகையில் 369 மி.கனஅடி நீர் இருப்பு உள்ளது. நீர்மட்டம் 31.89 அடி உள்ளது.
* 8.50 அடி கொண்ட வீராணம் ஏரிக்கு 3,563 கன அடி நீர் வந்து கொண்டு இருக்கிறது. தற்போது, 988 மி.கன அடி நீர் இருப்பு உள்ளது.