கிண்டி மருத்துவமனையில் வாலிபர் உயிரிழப்பு; டாக்டர்கள் பணி புறக்கணிப்பே காரணம் என புகார்
கிண்டி மருத்துவமனையில் வாலிபர் உயிரிழப்பு; டாக்டர்கள் பணி புறக்கணிப்பே காரணம் என புகார்
ADDED : நவ 16, 2024 05:28 AM

சென்னை : கிண்டி அரசு பல்நோக்கு மருத்துவமனையில் டாக்டர்கள் போராட்டம் காரணமாக, சிகிச்சை அனுமதிக்கப்பட்ட வாலிபர் இறந்ததால், அவரது உடலை வாங்கி மறுத்துஉறவினர்கள் போராட்டம் நடத்தினர்.
சென்னை, பெரும்பாக்கத்தை சேர்ந்தவர் விக்னேஷ்,33;கடந்த 13ம் தேதி இரவுவயிற்று வலி காரணமாக,கிண்டி அரசு பல்நோக்கு மருத்துவமனையில்அனுமதிக்கப்பட்டார். அங்கு சிகிச்சை பெற்று வந்த அவர் நேற்று காலை இறந்தார்.
இரண்டு நாட்களுக்கு முன், சரியான சிகிச்சை அளிக்கவில்லை என்று கூறி, அதே மருத்துவமனை டாக்டர் பாலாஜியை, நோயாளி ஒருவரின் மகன், கத்தியால் குத்தினார். பலத்த காயத்துடன் அவர் சிகிச்சை பெற்று வருகிறார். இதை கண்டித்து, டாக்டர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.
விக்னேஷ் உயிரிழப்புக்கு டாக்டர்கள் பணியில் இல்லாததும், முறையான சிகிச்சை அளிக்காததும் தான் காரணம் என, அவரது உறவினர்கள் குற்றஞ்சாட்டினர். பின், அவரது உடலை பெற மறுத்து, மருத்துவமனை வளாகத்தில் போராட்டத்தில் ஈடுபட்டனர். நீண்ட நேர பேச்சுக்கு பின், நேற்று பிற்பகல் விக்னேஷின் உடலை, அவரது உறவினர்கள் பெற்றுக்கொண்டனர்.