கடல் சீற்றமாக காணப்படும்: பொது மக்களுக்கு எச்சரிக்கை
கடல் சீற்றமாக காணப்படும்: பொது மக்களுக்கு எச்சரிக்கை
ADDED : நவ 26, 2024 07:43 PM

சென்னை: நாகை முதல் திருவள்ளூர் அருகே கடல் சீற்றத்துடன் காணப்படும் எனவும், பொது மக்கள் கடற்கரை பகுதிகளுக்கு செல்ல வேண்டாம் என எச்சரிக்கப்பட்டு உள்ளது.
இது தொடர்பாக தமிழக பேரிடர் மேலாண்மை ஆணையம் வெளியிட்ட அறிக்கையில் கூறியுள்ளதாவது: இன்று (நவ.26 ) முதல் நவ.,30 வரை நாகை முதல் திருவள்ளூர் வரை கடற்கரை பகுதிகள் கடல் சீற்றத்துடன் காணப்படும். இதனால், கடல் அலைகள் 9 முதல் 12 அடி வரை எழும்பக்கூடும். பொது மக்கள் கடற்கரை அருகே செல்வதை தவிர்க்க வேண்டும். இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டு உள்ளது.
நீர்வரத்து அதிகரிப்புசெம்பரம்பாக்கம் ஏரிக்கு காலையில் 200 கன அடியாக இருந்த நீர் வரத்து, 500 கன அடியாக அதிகரித்து உள்ளது. 24 அடி கொண்ட ஏரியில் தற்போது நீர்மட்டம் 18.15 அடியாக உள்ளது.
நிலக்கரி வெட்டும் பணி நிறுத்தம்
தொடர் மழை காரணமாக என்எல்சி.,யில் நிலக்கரி வெட்டும்பணி நிறுத்தப்பட்டது.