தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/நாமக்கல்/ஆர்ப்பரித்து கொட்டும் ஆகாய கங்கை நீர்வீழ்ச்சி

ஆர்ப்பரித்து கொட்டும் ஆகாய கங்கை நீர்வீழ்ச்சி

ஆர்ப்பரித்து கொட்டும் ஆகாய கங்கை நீர்வீழ்ச்சி


ADDED : நவ 22, 2026 09:05 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : நவ 22, 2026 09:05 PM


Follow on Google
அ நிறம் | அளவு

சேந்தமங்கலம்: நாமக்கல் மாவட்டம் கொல்லிமலைக்கு, விடுமுறை தினமான இன்று (நவ.,22), தமிழகம் மட்டுமின்றி பிற மாநிலங்களில் இருந்தும், சுற்றுலா பயணியர் ஏராளமானோர் இன்று வந்தனர்.

ஆகாயகங்கை நீர்வீழ்ச்சியில் தண்ணீர் கொட்டியதால், 800க்கும் மேற்பட்ட படிக்கட்டுகளை சிரமமாக கடந்தாலும், அருவியில் குளியல் போட்டு உற்சாகம் அடைந்தனர். இதேபோல், மாசிலா அருவி, நம் அருவியிலும் போதிய தண்ணீர் கொட்டியது. இதனால், ஆகாயகங்கை நீர்வீழ்ச்சிக்கு செல்ல முடியாத சிறுவர், சிறுமியர், வயதானோர் இந்த அருவிகளில் ஆனந்தமாக குளித்து மகிழ்ந்தனர்.

அரப்பளீஸ்வரர் கோவில், எட்டுக்கை அம்மன் கோவில், மாசி பெரியசாமி கோவில்களுக்கும் சென்று தரிசனம் செய்தனர். செம்மேடு அருகே, சீக்குப்பாறை முனையத்திலும் மக்கள் குவிந்தனர். வாசலுார்பட்டியில் உள்ள படகு இல்லத்தில், படகு சவாரி செய்து பொழுதை கழித்து ஊர் திரும்பினர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us