sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், அக்டோபர் 02, 2025 ,புரட்டாசி 16, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

தமிழகம்

/

மக்கள் பிரச்னைக்கு தீர்வு தந்தது 'தினமலர்' ஒரே செய்தியில் வந்தது ரூ.200 நோட்டு

/

மக்கள் பிரச்னைக்கு தீர்வு தந்தது 'தினமலர்' ஒரே செய்தியில் வந்தது ரூ.200 நோட்டு

மக்கள் பிரச்னைக்கு தீர்வு தந்தது 'தினமலர்' ஒரே செய்தியில் வந்தது ரூ.200 நோட்டு

மக்கள் பிரச்னைக்கு தீர்வு தந்தது 'தினமலர்' ஒரே செய்தியில் வந்தது ரூ.200 நோட்டு


ADDED : அக் 01, 2025 08:03 AM

Google News

ADDED : அக் 01, 2025 08:03 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பண மதிப்பிழப்பு நடவடிக்கையில், சில்லரை தட்டுபாடு பிரச்னையை மக்கள் எதிர் கொண்டபோது, 'தினமலர்' நாளிதழ் வெளியிட்ட செய்தியால், 200 ரூபாய் நோட்டு வெளிவந்து, 140 கோடி மக்களின் சிரமத்துக்கு தீர்வு ஏற்படுத்தியது.

இந்தியாவில் கள்ள நோட்டுகளை ஒழிக்கும் நடவடிக்கையாக, 2016 நவ., 8ம் தேதி மத்திய அரசு, 500 மற்றும் 1,000 ரூபாய் நோட்டுகளை செல்லாதவை என அறிவித்தது. மக்கள் தங்களிடம் இருந்த நோட்டுகளை, வங்கிகளில் கொடுத்து மாற்றிக்கொள்ளவும் அரசு கால அவகாசம் வழங்கியது.

அப்போது, மக்களிடையே ஏற்பட்ட சில்லரை தட்டுபாடு பிரச்னையை போக்கும் வகையில், நம் நாளிதழ், 2016ல் 'பிரதமர் மோடியின் கனவு நிறைவேற, 200 ரூபாய் நோட்டுகள் தேவை' என்ற அடிப்படையில் செய்தி வெளியிட்டது.

இந்த செய்தி வெளியாகி மக்களிடையே வரவேற்பை பெற்றது. அதைதொடர்ந்து, 200 ரூபாய் நோட்டுகள் வர உள்ளதாக மத்திய அரசு அறிவித்தது.

அந்த செய்தியில் கூறியிருப்பதாவது:


இந்தியா சுதந்திரம் அடைந்த போது, ஒரு ரூபாய், இரண்டு ரூபாய், ஐந்து ரூபாய், 10 ரூபாய், 100 ரூபாய் ஆகிய நோட்டுகள் பயன்பாட்டில் இருந்தன. பின், 1,000 ரூபாய் நோட்டு கொண்டுவரப்பட்டப்பின், 1949ம் ஆண்டில், 5,000 ரூபாய், 10,000 ரூபாய் நோட்டுகள் புழக்கத்தில் விடப்பட்டன. ஆனால், பணக்காரர்களிடம் மட்டும் தான், 1,000 ரூபாய்; 5,000 ரூபாய்; 10,000 ரூபாய் நோட்டுகள் புழக்கத்தில் இருந்தன. மக்களிடையே, 100 ரூபாய் நோட்டை பார்ப்பதே அரிதாக இருந்தது.

பின், ஜனதா கட்சி ஆட்சியில், 1978ம் ஆண்டில், 100; 1,000; 5,000; 10,000 ரூபாய் நோட்டுகள் பயன்பாட்டில் இருந்து அகற்றப்பட்டன. நீண்ட இடைவெளிக்கு பின், 1987ல், 500 ரூபாய் நோட்டும், 2,000ம் ஆண்டில் 1,000 ரூபாய் நோட்டும் மக்கள் பயன்பாட்டுக்கு வந்தன.

கடந்த 1960 - 70 காலக்கட்டத்தில், மக்களிடையே, ஒரு ரூபாய், இரண்டு ரூபாய், ஐந்து ரூபாய், 10 ரூபாய் மட்டுமே அதிகம் புழக்கத்தில் இருந்தது. அதற்கு அடுத்தப்படியாக தான், 100 ரூபாய் பயன்பாடு இருந்தது. அப்போது, 20, 50 ரூபாய் நோட்டுகள் கிடையாது என்பதால், 100 ரூபாய் நோட்டுக்கு சில்லரை கிடைப்பதே சவாலாக இருந்தது.

சில்லரை தட்டுப்பாடு காரணமாக, 1972ல், 20 ரூபாய் நோட்டு வெளியிடப்பட்டது. அந்த நோட்டு, ஆரஞ்ச் வண்ண நிறத்தில் மக்களை கவரும் வகையில் இருந்ததுடன், சில்லரை பிரச்னைக்கு ஓரளவு தீர்வு கிடைத்தது.

அதன் தொடர்ச்சியாக, 1975ம் ஆண்டில், 50 ரூபாய் நோட்டு வெளி வந்தது. அதன்பின் தான், சில்லரை தட்டுப்பாடு முற்றிலும் குறைந்தது. தொடர்ந்து, பொருளாதார வளர்ச்சிக்கு ஏற்ப, 1987ம் ஆண்டில், 500 ரூபாய் நோட்டு வெளியானது.

இந்நிலையில், பணமதிப்பிழப்புக்கு பின், 2,000 ரூபாய் நோட்டு கொண்டு வர உள்ளதாக மத்திய அரசு அறிவிப்பு வெளியானது. அவ்வாறு வந்தால், மக்களுக்கு சில்லரையாக, 100 ரூபாய் மட்டுமே தர வேண்டிய நிலை ஏற்படும். எனவே, 200 ரூபாய் நோட்டுகள் கொண்டு வந்தால், மக்களின் சில்லரை பிரச்னைக்கு தீர்வு கிடைக்கும். கள்ள நோட்டு புழக்கம் வெகுவாக குறையும் வாய்ப்பு உள்ளது.

இந்த அளவுக்கு குறைந்த தொகைக்கு கள்ள நோட்டு அடிக்க முடியாது என்பதால், பிரச்னை ஏற்பட வாய்ப்பு இல்லை. கருப்பு பணம் பதுக்குவோருக்கும், 500, 1,000, 2,000 ரூபாய் நோட்டுகளை தான் பதுக்குவார்கள். 200 ரூபாய் நோட்டுகள் பதுக்களுக்கு வாய்ப்பில்லை.

அத்துடன், 100, 500, 1,000, 2,000 ரூபாய் நோட்டுகள் வரிசையில், 200 ரூபாய் நோட்டு வந்தால், மக்களுக்கு சில்லரை தட்டுப்பாடு வராது. கள்ள நோட்டு, கருப்புப்பணம் பதுக்களையும் தவிர்க்க முடியும். அந்த காலக்கட்டத்தில், 20 ரூபாய் நோட்டு செய்ததை, தற்போது 200 ரூபாய் நோட்டு செய்யும். இதற்கு மத்திய அரசு ரிசர்வ் வங்கி நடவடிக்கை எடுக்க வேண்டும். அப்போது தான், பிரதமர் மோடியின் கனவும் நனவாகும்.

இவ்வாறு நம் நாளிதழ் செய்தி வெளியிட்டு இருந்தது.

பண மதிப்பிழப்பு நடவடிக்கைக்கு பின், மக்கள் சில்லரை தட்டுப்பாட்டால் பெரும் சிரமத்தை அனுபவித்து வந்தனர். இவ்வாறாக பிரச்னைகள் சென்று கொண்டிருக்கும்போது, 2017 ஆக., 25ம் தேதி, மக்களை கவரும் வகையிலான, 200 ரூபாய் நோட்டுகள் வெளியானது.

இந்த நோட்டுகள், 20 ரூபாய் நோட்டு வடிவில், 200 ரூபாய் நோட்டு ஆரஞ்சு வண்ணத்தில் பலவிதமான நுணுக்கமான தொழில்நுட்பத்தில் வெளி வந்தது. அதன்பின், சில்லரை தட்டுப்பாடு குறைந்ததுடன், மக்களிடையே அதிகளவில் புழக்கத்தில், 200 ரூபாய் நோட்டு காணப்படுகிறது. இந்த, 200 ரூபாய் நோட்டுகள் மக்களிடையே அதிகரித்த நிலையில், 2,000 ரூபாய் நோட்டுகள் மக்கள் புழக்கத்தில் இருந்து அகற்றப்பட்டன.

தினமலர் நாளிதழை பொருத்தவரையில், குறிப்பிட்ட பிரச்னை மட்டுமல்லாமல், பொதுமக்கள் நெருடிக்கடியில் சிக்கி தவிக்கும்போதெல்லாம், அவர்களுக்கான பிரச்னையை தீர்த்து வைக்க கூடிய வகையில், தொடர்ந்து செயல்பட்டு வருகிறது. இதுபோன்று பல்வேறு மக்கள் பிரச்னைக்கு கை கொடுத்ததில், இந்த செய்தியின் வாயிலாக தெரிந்து கொள்ள முடியும்.






      Dinamalar
      Follow us